வாக்கு எந்திரத்தில் எங்கே சின்னம் தெரியாமல் இருக்கிறதோ, அதுவே என் சின்னம் - கோவை நா.த.க. வேட்பாளர்

”ஒரே ஒரு முறை மாற்று அரசியலை முன்வைத்து களத்தில் நிற்கும் நாம் தமிழர் கட்சியினை ஆதரிக்க வேண்டும்”

news18
Updated: April 16, 2019, 3:37 PM IST
வாக்கு எந்திரத்தில் எங்கே சின்னம் தெரியாமல் இருக்கிறதோ, அதுவே என் சின்னம் - கோவை நா.த.க. வேட்பாளர்
கல்யாண சுந்தரம் நாம் தமிழர் கட்சி
news18
Updated: April 16, 2019, 3:37 PM IST
நாளை மறுநாள் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இன்று மாலையுடன் வாக்கு சேகரிப்பு நிறைவடைவதால் பிரச்சாரங்கள் சூடு பிடித்துள்ளன.

அந்த வகையில் நாம் தமிழர் கட்சி வேட்பாளரான பேராசிரியர் கல்யாண சுந்தரம் சூலூர் பகுதியில் வாக்கு கேட்டு பிரச்சாரம் செய்தார்.

”கொசுவில்லா கோவை, தாகமில்லா கோவை, வேலைவாய்ப்புகள் மிகு கோவை என்பன உட்பட நான்கு முக்கிய முழக்கங்களை முன் வைத்து இந்தத் தேர்தலை சந்திக்கின்றோம் .கோவையின் தண்ணீர், சூயஸ் நிறுவனத்திற்கு தாரை வார்க்கப்பட்டுள்ளது. காசு கொடுத்து தண்ணீர் வாங்கும் நிலைக்கு தள்ளப்படுகிறோம்.

கோவையில் 50 ஆயிரம் தொழில் கூடங்கள் மூடப்பட்டு லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். ஜி.எஸ்.டியில் மாற்றம் செய்யப்பட வேண்டும்.

ஒரே ஒரு முறை மாற்று அரசியலை முன்வைத்து களத்தில் நிற்கும் நாம் தமிழர் கட்சியினை ஆதரிக்க வேண்டும். படித்த புதிய இளைஞர்களின் கரங்களில் அரசியல் வந்து சேர வேண்டும் ” என பிரச்சாரத்தில் அவர் பேசினார்.

அதைத் தொடர்ந்து “வாக்கு பதிவு இயந்திரத்தில் எந்த இடத்தில் சின்னம் தெரியாமல் இருக்கின்றதோ, அது தான் நாம் தமிழர் சின்னம். கோவை மக்களவை தொகுதியில் 4 வது இடத்தில் விவசாயி சின்னம் இருக்கின்றது“ எனப் பேசினார்.

Also Watch : இருசக்கர வாகனத்தில் சென்று நாராயணசாமி தீவிர பிரசாரம்!

First published: April 16, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...