• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • Jallikattu 2021 | ஜல்லிக்கட்டில் மாடுபிடி வீரர்கள் 300 நபர்களுக்கு மிகாமல் கலந்து கொள்ள அனுமதி.. (வீடியோ)

Jallikattu 2021 | ஜல்லிக்கட்டில் மாடுபிடி வீரர்கள் 300 நபர்களுக்கு மிகாமல் கலந்து கொள்ள அனுமதி.. (வீடியோ)

Youtube Video

ஜல்லிக்கட்டில் மாடுபிடி வீரர்கள் 300 நபர்களுக்கு மிகாமல் கலந்து கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

  • Share this:
    தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு, கட்டுப்பாடுகளுடன் அரசு அனுமதி வழங்கியுள்ளது. கொரோனா பெருந்தொற்று காலத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறுமா என்ற கேள்வி எழுந்த நிலையில், அதற்கு அனுமதி அளித்துள்ள தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளையும் வெளியிட்டுள்ளது.

    அதன்படி, ஜல்லிக்கட்டு,மஞ்சுவிரட்டு மற்றும் வடமாடு நிகழ்ச்சிகளில், மாடுபிடி வீரர்கள் 300 நபர்களுக்கு மிகாமல் கலந்துகொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எருதுவிடும் நிகழ்ச்சியில் 150 வீரர்களுக்கு மிகாமல் பங்கேற்கலாம். இந்த நிகழ்ச்சிகளில், திறந்த வெளியின் அளவிற்கு ஏற்ப ஐம்பது சதவீத அளவிற்கு மிகாமல் பார்வையாளர்கள் கலந்து கொள்ள வேண்டும் எனவும், பார்வையாளர்கள் உடல் வெப்ப பரிசோதனை செய்த பிறகே அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


    ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில், மாடுபிடி வீரர்களாக பங்கேற்பவர்கள், கொரோனா தொற்று இல்லை என சான்று பெற்றிருக்க வேண்டும் என்றும், பார்வையாளர்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிந்து தனி மனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் எனவும் தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

    புதிய வாக்குச் சாவடிகள் உருவாக்கப்படும்



    உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: