Home /News /tamil-nadu /

தமிழகத்தில் ஒமைக்ரான் பாதிப்பு இல்லை - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தமிழகத்தில் ஒமைக்ரான் பாதிப்பு இல்லை - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

மா.சுப்பிரமணியன்

மா.சுப்பிரமணியன்

தமிழகத்தில் இதுவரை ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு கண்டறியப்படவில்லை என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

    ஒமைக்ரான் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் சுகாதாரப்பணிகள் குறித்து, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், மருத்துவ குழுவினருடன் மதுரை விமான நிலையத்தில் ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஒமைக்ரான் பாதிப்பு அதிகமுள்ள நாடுகளில் இருந்து வருவோர் ஒருவாரம் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அமைச்சர் கேட்டுக்கொண்டார். அதற்கு பின்வே வெளியில் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார். விமான நிலையங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்படும் நிலையில், கட்டணம் செலுத்த முடியாவதவர்களுக்கு இலவசமாக பரிசோதனை செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

    பொது இடங்களுக்கு வருவோர் 2 டோஸ் தடுப்பூசி செலுத்துவது கட்டாயம் என்ற விதி தமிழகம் முழுவதும் உள்ளது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கமளித்துள்ளார். போதுமான தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளதாகவும், தடுப்பூசி செலுத்தாதவர்கள் உடனடியாக தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.

    இதனிடையே ஒமைக்ரான் அச்சுறுத்தல் காரணமாக வெளிநாடுகளிலிருந்து தமிழகம் வரும் பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டிலிருந்து வரும் பயணிகள் அனைவருக்கும் ஆர்டி - பிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டு, முடிவுகள் வரும் வரை சுமார் 6 மணி நேரம் விமானநிலையத்திலேயே தங்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இவர்களை மற்ற விமானப் பயணிகளுடன் சேர விடாமல் தனிமைப்படுத்துவதற்காக சென்னை விமான நிலையத்தில் புதிய வருகைப் பகுதி பயன்படுத்தப்படுகிறது. தனிமைப்படுத்தப்படுபவர்களுக்கு விமான நிலையங்கள் சார்பில் உணவு, இலவச வைஃபை உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன.

    விமானங்களில் இருந்து நாற்பது நாற்பது பயணிகளாக இறக்கப்பட்டு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. இதேபோல் 6 மணி நேர தனிமைப்படுத்துதல் முடிந்த பிறகும், குழு குழுவாகவே பயணிகள் வெளியில் அனுப்பப்படுகின்றனர். இவை அனைத்தையும் மேற்பார்வையிட தமிழக மக்கள் நல்வாழ்வு துறை சார்பில், அந்தந்த விமான நிலையங்களுக்கு தனி அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
    Published by:Vijay R
    First published:

    Tags: God, Omicron

    அடுத்த செய்தி