முகப்பு /செய்தி /தமிழ்நாடு / அதிமுக பொதுச் செயலாளரா அல்லது தலைவரா..? இபிஎஸ் அளித்த பதில்..!

அதிமுக பொதுச் செயலாளரா அல்லது தலைவரா..? இபிஎஸ் அளித்த பதில்..!

இபிஎஸ் பேட்டி

இபிஎஸ் பேட்டி

ஓபிஎஸ் மேல்முறையீட்டுக்கு மட்டுமல்ல எங்கு சென்றாலும் கவலையில்லை என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Madurai, India

அதிமுக பொதுக்குழு வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு செல்லும் என தீர்ப்பளித்த நீதிபதிகள், ஓபிஎஸ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தனர். தீர்ப்பின் மூலம் எடப்பாடி பழனிசாமிதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லும் என்பது உறுதியாகியுள்ளது.

இதுதொடர்பாக மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த இபிஎஸ், “பொதுக்குழு செல்லும் என்ற தீர்ப்பு வந்துள்ளது. தர்மம், நீதி, உண்மை வென்றுள்ளது. ஓபிஎஸ்ஸுக்கும் எங்களுக்கும் இனி எந்தத் தொடர்பும் கிடையாது. மூத்த நிர்வாகிகளோடு ஆலோசித்து பொதுச்செயலாளராக பொறுப்பு ஏற்பது குறித்து முடிவு செய்யப்படும்.

டிடிவி தினகரன் தனிக்கட்சி தொடங்கிவிட்டதால் அவருக்கு எங்களைப் பற்றி பேசத் தகுதியில்லை. கடந்த காலத்தில் இந்த ஆட்சி 2 மாதங்கள் நீடிக்குமா, 4 மாதங்கள் நீடிக்குமா என்று எதிர்க்கட்சிகள் பேசி வந்தனர். ஆனால்,  நான்கரை ஆண்டுகள் பொற்கால ஆட்சியை வழங்கினேன். ஓபிஎஸ் மேல்முறையீட்டுக்கு மட்டுமல்ல எங்கு சென்றாலும் கவலையில்லை. எதிர்காலத்தில் அதிமுக ஆட்சி அமைக்கும்” என்று கூறினார்.

நீங்கள் பொதுச் செயலாளரா அல்லது அதிமுகவின் தலைவரா என்ற நியூஸ் 18 தமிழ் செய்தியாளரின் கேள்விக்கு, “நான் ஒன்றரை கோடி அதிமுக தொண்டர்களின் பொதுச்செயலாளர்” என்று பதிலளித்தார் இபிஎஸ்.

First published:

Tags: AIADMK, Edappadi Palaniswami, O Panneerselvam