சேகர் பாபு எவ்வளவு சாமி கும்பிட்டாலும், மா. சுப்ரமணியன் என்ன ஊசி போட்டாலும் மாநகராட்சி நன்றாக வேலை செய்தால்தான் மீண்டும் ஆட்சியமைக்க முடியும் என அமைச்சர் கே.என்.நேரு பேசினார்.
சென்னைப் பள்ளிகளுக்கான லோகோ மற்றும் குறும்படம் வெளியிடுதல் நிகழ்ச்சி, ரிப்பன் கட்டிட வளாகத்தில் உள்ள அம்மா மாளிகையில் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் கே.என்.நேரு, மா.சுப்பிரமணியன், சேகர் பாபு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியின்போது அமைச்சர் கே.என்.நேரு பேசியதாவது, மாநகராட்சி ஆசிரியர்கள் சிறப்பாக பணியாற்றுங்கள். உங்களுக்கு பதவி உயர்வு, ஊதிய உயர்வு சட்டப்படி உரிய முறையில் மாநகராட்சி வழங்கும்.
சென்னை மாநகராட்சி மற்ற மாநகராட்சிக்கு முன் உதாரணமாக இருக்க வேண்டும். அரசிற்கு இணையாக ஒரு தனி அரசாங்கம் போல் மாநகராட்சி செயல்படுகிறது. அதனை மேலும் சிறப்புடன் செயல்பட அனைவரும் உறுதுணையாக இருக்க வேண்டும்.
சென்னையில் மழைநீர் வடிகால் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக தோண்டப்பட்டுள்ள குழிகளை பருவமழைக்குள் மூட வேண்டும் என முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். மாநகராட்சிக்கு கலை அறிவியல், பொறியியல் மருத்துவ கல்லூரி வேண்டும் என அதற்கான முயற்சிகள் எடுத்து வருகிறோம். தென் சென்னையில் மருத்துவ கல்லூரி அமைக்க திட்டமிட்டு வருகிறோம்.
மாநகராட்சியில் 50 ஆயிரம் ஊழியர்கள் உள்ளனர். அவர்களது பிள்ளைகள் படிப்பதற்கு மாநகராட்சி கல்லூரியில் 32% இடஒதுக்கீடு கிடைக்கும். அதன் மூலம் மாநகராட்சி மேலும் உத்வேகத்துடன் செயல்படும்.
அமைச்சர் சேகர்பாபு தமிழ்நாடு முழுவதிலும் உள்ள கோவில்களில் எல்லாம் ஆய்வு நடத்துகிறார். சுகாதார துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் பொறுப்பேற்றது சவாலான நேரம். கொரோனாவைத் தொடர்ந்து காய்ச்சல் பரவி வருகிறது. அமைச்சர் சுப்பிரமணியனின் பணி குறித்து நான் வியப்பு அடைந்திருக்கிறேன்’ என தெரிவித்தார்.
மேலும், ’சேகர் பாபு எவ்வளவு சாமி கும்பிட்டாலும், மா.சுப்பிரமணியன் என்ன ஊசி போட்டாலும் மாநகராட்சி நன்றாக வேலை செய்தால் தான் மீண்டும் ஆட்சியைப் பிடிக்க முடியும்’ என்று அமைச்சர் நேரு நகைச்சுவையாக குறிப்பிட்டார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Chennai corporation, K.N.Nehru, Ma subramanian, Minister Sekar Babu