ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

இன்று விடுமுறை கிடையாது... பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் இயங்கும் - தமிழ்நாடு அரசு அதிரடி

இன்று விடுமுறை கிடையாது... பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் இயங்கும் - தமிழ்நாடு அரசு அதிரடி

பள்ளி

பள்ளி

தமிழகத்தில் இன்று விடுமுறை கிடையாது என்றும், அனைத்து பள்ளி, கல்லூரிகளும் இயங்கும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகள் இன்று இயங்கும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

    இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை அக்டோபர் மாதம் 24ம் தேதி கொண்டாடப்பட்டது. இந்த பண்டிகை முன்னிட்டு, சொந்த ஊர்களுக்கு சென்று திரும்பும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஏதுவாக 25.10.2022 அன்று ஒரு நாள் மட்டும் , தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டது.

    இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் 19.11.2022 அன்று பணி நாளாக இருக்கும் என்று தமிழ்நாடு அரசு ஏற்கனவே தெரிவித்திருந்தத. அதன்படி, தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி கல்லூரிகளும் இன்று இயங்கும்.

    கடந்த மாதம் 24 ஆம் தேதி தீபாவளி கொண்டாடப்பட்ட நிலையில், மாணவர்கள், ஆசிரியர்கள் சொந்த ஊர் சென்று திரும்பி வரும் வகையில் அதற்கு மறுநாள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. அதை ஈடு செய்யும் வகையில் இன்று அனைத்து பள்ளி, கல்லூரிகளும் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    Also see... Live : இன்று தமிழக அரசின் குரூப்-1 பணிகளுக்கான முதல் நிலைத்தேர்வு

    முன்னதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பள்ளி வேலை நாட்கள் குறித்த கேள்விக்கு பதில் அளித்திருந்தார். அதில், கடந்த ஆண்டுகளைப் போல் இந்த கல்வியாண்டில் பாடத்திட்டம் குறைக்கப்பட வில்லை. பாடங்களை முழுமையாக நடத்த வேண்டிய கடமை உள்ளது. முன்னதாக, தீபவாளிக்கு அடுத்த நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டது. அந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் வரும் 19ம் தேதி சனிக்கிழமையான இன்று வார விடுமுறைக்கு பதிலாக பணி நாளாக நடைபெறும் என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: School, School education department, Tamil Nadu