#Breaking | கோடநாடு விவகாரம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி, ஸ்டாலின் பேச உயர் நீதிமன்றம் தடை

ஸ்டாலின் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கோடநாடு குறித்து தொடர்ந்து பேசினால் வாயை உடைப்பேன் என முதல்வர் பேசியதாக தெரிவித்தார்.

news18
Updated: April 16, 2019, 2:55 PM IST
#Breaking | கோடநாடு விவகாரம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி, ஸ்டாலின் பேச உயர் நீதிமன்றம் தடை
ஸ்டாலின் | எடப்பாடி பழனிசாமி
news18
Updated: April 16, 2019, 2:55 PM IST
கோடநாடு கொலை, கொள்ளை விவகாரம் தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் ஆகிய இருவருமே பேசக்கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

கொடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை தொடர்புபடுத்தி பேசியதாக திமுக தலைவர் ஸ்டாலினுக்கு எதிராக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி ஸ்டாலின் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், அவதூறு வழக்கு விசாரணைக்கு தடை விதித்து உத்தரவிட்டது.

நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், தேர்தல் பிரச்சாரத்தில் இந்த விவகாரத்தை தொடர்ந்து பேசி வருவதாக கூறி, மு.க.ஸ்டாலின் மீதான வழக்கு விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரி தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.

இந்த மனு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, இதுவரை ஸ்டாலின் பேசிய கூட்டங்களில் வீடியோ ஆதாரங்களை அரசுத்தரப்பு தாக்கல் செய்ததுடன், மொபைல் போனிலும் போட்டு காட்டப்பட்டது.

இதனையடுத்து, நீலகிரி நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு முடியும் வரை கொடநாடு கொலை, கொள்ளை விவகாரம் குறித்து பேச கூடாது என உத்தரவிட வேண்டும் என அரசுத்தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

ஸ்டாலின் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கோடநாடு குறித்து தொடர்ந்து பேசினால் வாயை உடைப்பேன் என முதல்வர் பேசியதாக தெரிவித்தார்.

இதனையடுத்து நீதிபதி, கொடநாடு விவகாரம் தொடர்பாக பரஸ்பரம் முதல்வரும், ஸ்டாலினும் தனிநபர் தாக்குதலில் ஈடுபட வேண்டாம் என அறிவுறுத்தி விசாரணையை தள்ளிவைத்தார்.

இன்று இந்த மனு மீண்டும் விசாரணைக்கு வந்த போது, “கோடநாடு விவகாரம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி மற்றும் மு.க ஸ்டாலின் பேசக்கூடாது” என்று நீதிபதி உத்தரவிட்டார்.

First published: April 16, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...