முகப்பு /செய்தி /தமிழ்நாடு / குற்றச்சாட்டை நிரூபித்தால் இந்த நிமிடமே ராஜினாமா செய்யத் தயார் - அமைச்சர் சி.வி சண்முகம்..

குற்றச்சாட்டை நிரூபித்தால் இந்த நிமிடமே ராஜினாமா செய்யத் தயார் - அமைச்சர் சி.வி சண்முகம்..

சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம்

சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம்

கல்குவாரி உரிமம் விவகாரத்தில் அமைச்சர் சி.வி.சண்முகம் பதவி விலக்கோரிய மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டிருந்த நிலையில், டெண்டர் விவகாரத்தில் முறைகேடுகள் ஏதும் நடைபெறவில்லை என அமைச்சர் சிவி சண்முகம் விளக்கமளித்துள்ளார்.

  • Last Updated :

வானூர் அதிமுக எம்.எல்.ஏ சக்ரபாணி மகனுக்கு திருவக்கரையில் உள்ள கல்குவாரியை முறைகேடாக கனிம வளத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் ஒதுக்கியுள்ளதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியிருந்தார். தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி உறவினர்களுக்கு கல்குவாரி உரிமம் வழங்கிய அமைச்சர் சி.வி.சண்முகம் பதவி விலக வேண்டும் எனவும் கூறியிருந்தார்.

இந்நிலையில், தலைமைச்செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சி.வி.சண்முகம், மு.க.ஸ்டாலினின் குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும், முறையாக பொது ஏலத்தில் எல்.எல்.ஏ சக்ரபாணியின் மகன் பங்கேற்று 28 லட்சம் ரூபாய்க்கு குவாரியை ஏலம் எடுத்ததாகவும், இதில் விதி மீறல்கள் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க. .கல் குவாரிகளை தன் இஷ்டத்திற்கு கட்சி எம்.எல்.ஏ. மகனுக்கு கொடுக்க எந்தச் சட்டமும் அனுமதிக்கவில்லை - ஆர்.எஸ். பாரதி காட்டம்

திமுகவில் அதிகாரப்போட்டி நீடித்து வருவதாகவும் தன் மீதான குற்றச்சாட்டை நிரூபித்தால் இந்த நிமிடமே ராஜிமானா செய்ய தயாராக இருப்பதாகவும் கூறினார். தொடர்ந்து பேசிய அவர், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சட்டம் தெரியாமல் தினம் ஒரு அறிக்கை விட்டு அவதூறு பரப்பி வருவதாக சாடினார்.

top videos

    இந்த விவகாரம் குறித்து ஏற்கனவே ஆர்.எஸ். பாரதி,” அரசின் சொத்தான கல் குவாரிகளை தன் இஷ்டத்திற்கு கட்சி எம்.எல்.ஏ. மகனுக்கு கொடுக்க எந்தச் சட்டமும் அனுமதிக்கவில்லை” என்று தனது அறிக்கையில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    First published:

    Tags: CV Shanmugam, Dmk leader mk stalin, M.K.Stalin