தி.மு.கவுடன் இணைந்து செயல்பட எங்களுக்கு தயக்கம் இல்லை - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

தி.மு.கவுடன் இணைந்து செயல்பட எங்களுக்கு எந்த தயக்கும் இல்லை. ஆனால், அவர்கள்தான் வராமல் இருக்கின்றனர் என்று அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

தி.மு.கவுடன் இணைந்து செயல்பட எங்களுக்கு தயக்கம் இல்லை - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்
அமைச்சர் பாண்டியராஜன்
  • Share this:
சென்னை வியாசார்பாடி பகுதியில் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் கே.பாண்டியராஜன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், ‘90 நாட்களில் 50 அறிக்கைகள் ஸ்டாலின் வெளியிட்டு இருப்பது கின்னஸ் சாதனையாக கூட இருக்கலாம்.

மொத்தம் எண்ணிக்கையில் குணமடைந்தவர்கள் எண்ணிக்கையை எதிர்கட்சியினர் மறைத்து பேசுவது முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல் உள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் குணமடைந்த பின்னர் அவர்களுக்கு குறைந்தது இரண்டு மாதத்திற்காவது அவர்களுக்குள் நோய் எதிர்ப்பு சக்தி உருவாவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

திமுகவுடன் இணைந்து செயல்பட எங்களுக்கு எந்த தயக்கமும் இல்லை. ஆனால் அவர்கள் தான் வராமல் இருக்கின்றனர். அமைச்சர்களுடன் இணைந்து நீங்களும் களத்தில் இறங்கி பணிபுரியுங்கள். எந்த திமுகவினரும் தன்னார்வலராக முன்வந்து நாங்கள் அவர்களை புறக்கணிக்கவில்லை.


இரண்டு விதமாக மு.க.ஸ்டாலின் அறிக்கையை வெளியிடுகிறார். முதலமைச்சர் செய்ய இருப்பதை தான் முன் நாளில் மு.க.ஸ்டாலின் அறிக்கையாக வெளியிடுகிறார். அல்லது செய்யவே முடியாத ஒன்றை தான் அறிக்கையாக வெளியிடுகிறார். ஏற்கனவே தொற்று இருப்பவர்களை தான் கண்டறிகிறோம்.

புதிதாக தொற்று ஏதும் உருவாகவில்லை. அரசு எவ்வளவு முயற்சி எடுத்தும் தொற்று குறையவில்லை என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. அது உண்மை இல்லை. தண்டையார்பேட்டை மண்டலத்தில் 70 சதவிகிதம் பேர் குணமடைந்துள்ளனர்’ என்று தெரிவித்தார்.
First published: June 29, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading