Union
Budget 2023

Highlights

ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

ஆதிதிராவிடர், பழங்குடியினர் கல்வி திட்டங்களுக்கு நிதி இல்லை... ஆர்டிஐயில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்

ஆதிதிராவிடர், பழங்குடியினர் கல்வி திட்டங்களுக்கு நிதி இல்லை... ஆர்டிஐயில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்

ஆர்டிஐ

ஆர்டிஐ

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் கல்வி சார்ந்த திட்டங்களுக்கு கடந்த நிதியாண்டில் ஒரு ரூபாய் கூட நிதி ஒதுக்கவில்லை என்பது தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் வெளிவந்துள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India

கடந்த 2021-22ம் நிதியாண்டு பட்ஜெட்டில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறைக்கு ரூ.4,142 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதில் கல்வி சார்ந்த 33 திட்டங்களுக்கென தனியாக நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இந்த திட்டங்கள் ஒவ்வொன்றிற்கும் எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது என்பது குறித்து மதுரையை சேர்ந்த ஆர்டிஐ ஆர்வலர் கார்த்திக் தகவல் அறியும் உரிமை சட்டம் வாயிலாக தகவல்கள் கேட்டிருந்தார். அதற்கு பெறப்பட்ட பதில்கள் மூலம் பல அதிர்ச்சியான தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதில், 33 திட்டங்களில் வெறும் 20 திட்டங்களுக்கு மட்டுமே நிதி ஓதுக்கீடு செய்யப்பட்டு ரூ.1,423 கோடி மட்டுமே செலவு செய்யப்பட்டுள்ளதும், மீதம் 13 திட்டங்களுக்கு ஒரு ரூபாய்க்கூட நிதி செலவு ஒதுக்கவில்லை என்பது தெரிய வந்துள்ளது.குறிப்பாக சிறந்த பள்ளிகளுக்கான தமிழக முதலமைச்சரின் மெரிட் விருது, மேல்நிலைப் பள்ளிகளில் படிக்கும் மாணவியர்களின் பெற்றோர்களுக்கான கவுன்சிலிங் திட்டம், மாணவர்களின் வெளிநாட்டு மேற்படிப்பிற்கான உதவித்தொகை, பள்ளிகளில் லேப் உபகரணங்கள் கொள்முதல், ஆதி திராவிடர் மாணவர்களுக்கான நலத்திட்டங்கள், பள்ளிகளுக்கான சிறப்பு பரிசு திட்டம் உள்ளிட்ட 13 முக்கிய திட்டங்களுக்கு ஒரு ரூபாய் நிதி கூட பயன்படுத்தவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையில் கடந்த 2016-2021 வரையிலான 5 ஆண்டுகளில் ரூ. 927 கோடி பயன்படுத்தாமல் அரசிடம் திருப்பி ஒப்படைக்கப்பட்டிருப்பது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் வெளியாகி இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

First published: