Home /News /tamil-nadu /

தமிழ்நாடு எஸ்சி, எஸ்டி ஆணையத்திற்குரிய அதிகாரிகளை உடனடியாக நியமிக்க வேண்டும் - தொல்.திருமாவளவன் கோரிக்கை

தமிழ்நாடு எஸ்சி, எஸ்டி ஆணையத்திற்குரிய அதிகாரிகளை உடனடியாக நியமிக்க வேண்டும் - தொல்.திருமாவளவன் கோரிக்கை

தொல். திருமாவளவன்

தொல். திருமாவளவன்

Thirumavalavan | தமிழ்நாடு SC/ST ஆணையம் அமைக்கப்பட்டு 10 மாதங்கள் ஆன பின்பும் பணியாளர்கள் யாரும் இன்னும் நியமிக்கப்படவில்லை - திருமாவளவன் 

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    தமிழ்நாடு எஸ்சி.எஸ்டி ஆணையத்திற்குரிய அதிகாரிகளை உடனடியாக நியமிக்க வேண்டுமாறு முதலமைச்சருக்கு  விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் கோரிக்கை வைத்துள்ளார்.

    எஸ்சி.,எஸ்டி மக்களுக்கான தேசிய ஆணையங்கள் போன்று, மாநில அளவில் ஆதிதிராவிடர்கள், பழங்குடியினர் ஆகியோருடைய சட்டப்பூர்வமான உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில் நல ஆணையம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை  பல பத்தாண்டுகளுக்கு மேல்  நிலுவையில் இருந்து வந்தது.

    2021 சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியமைத்த திமுக அரசு, ஆதிதிராவிடர்கள், பழங்குடியினரின் சட்ட உரிமைகளை பாதுகாக்கவும்,  அவர்களுடைய முக்கியமான பிரச்னைகளுக்குத் தீர்வு காணவும், 'தமிழ்நாடு ஆதிதிராவிடர் - பழங்குடியினர் நல ஆணையம்' என்கிற புதிய அமைப்பை கொண்டு வந்தது.  சட்டத்தில் நிறுவப்பட்ட இந்த ஆணையம், தன்னாட்சி அதிகாரத்துடன் செயல்படும் வகையில் செயல்படும் அமைப்பாக திகழும்.  

    சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி சிவகுமார் ஆணையத்தின் தலைவராகவும், 'தலித் முரசு' இதழ்  நடத்தி வரும் புனித பாண்டியன் துணைத்  தலைவராகவும் நியமிக்கப்பட்டிருந்தனர்.

     இதையும் வாசிக்க: தமிழகத்தில் அரசு பள்ளிகளில் தொழிற்கல்வி பாடப் பிரிவுகள் மூடல்: பள்ளிக்கல்வித்துறை

    இந்நிலையில், ஆணையம் அமைக்கப்பட்டு 10 மாதங்கள் ஆன பின்பும் அதற்குரிய அதிகாரிகள் நியமிக்கப்பட வில்லை என்று விசிக தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக, அவர் தனது ட்விட்டர் குறிப்பில், "

    தமிழ்நாடு SC/ST ஆணையம் அமைக்கப்பட்டு 10 மாதங்கள் ஆன பின்பும் பணியாளர்கள் யாரும் இன்னும் நியமிக்கப்படவில்லை. இன்னும் ஆணையத்திற்கான நிதியும் ஒதுக்கப்படவில்லை. தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதிமற்றும் மேம்பாட்டு கழகத்தின் (TAHDCO) அதிகாரிகளே ஆணையத்தின் நிர்வாகத்தையும் கவனித்து வருகிறார்கள். இதுவரை ஆணையத்திற்கு சாதிப் பாகுபாடு தொடர்பான 1,100 மனுக்கள் வந்துள்ளன.



    எனவே, தமிழ்நாடு எஸ்சி.எஸ்டி ஆணையத்திற்குரிய அதிகாரிகளை உடனடியாக நியமிக்க வேண்டும் என்றும்,   அத்துடன், ஆணையம் வீரியத்துடன் இயங்குவதற்கேற்ப போதிய நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றும் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலினுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
    Published by:Salanraj R
    First published:

    Tags: National SC ST commission, Thol. Thirumavalavan

    அடுத்த செய்தி