தமிழகத்தில் இன்று முழு ஊரடங்கு கிடையாது- 9 மணி வரை கடைகள் திறந்திருக்கும்

கோப்புப் படம்

தமிழகத்தில் இன்று ஊரடங்கு கிடையாது. எந்தக் கட்டுப்பாடுகளும் இன்று கடைகள் 9 மணி வரையில் திறந்திருக்கும்.

 • Share this:
  தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. நாள் ஒன்றுக்கு கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 26,000-த்தைக் கடந்துள்ளது. இந்தநிலையில், கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் நாளை முதல் முழு ஊரடங்கு பிறக்கப்படுகிறது.
  இருப்பினும், அத்தியாவசிக் கடைகள் திறந்திருப்பதற்கு எந்த தடைகளும் விதிக்கப்படவில்லை. உணவகங்கள், தேநீர் கடைகள், மளிகை சாமான் கடைகள் செயல்பட நண்பகல் 12 மணி வரை அனுமதிக்கப்படுகிறது. நாளை முதல் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்படுவதால் நேற்றும் இன்றும் கடைகள் இரவு வரை திறந்திருக்க அனுமதிக்கப்பட்டது.

  இதுதொடர்பாக தமிழக அரசு அறிவிப்பில், ‘முழு ஊரடங்கு 10.05.2021 முதல் அமல்படுத்தப்படவிருப்பதை முன்னிட்டு, பொது மக்களும், நிறுவனங்களும் தமக்குத் தேவையான முன்னேற்பாடுகளை செய்து கொள்வதற்காக 08.05.2021 (சனிக்கிழமை) மற்றும் 09.05.2021 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய இரு தினங்களிலும் அனைத்து கடைகளும், நிறுவனங்களும் வழக்கம் போல காலை 06.00 மணி முதல் இரவு 09.00 மணி வரை இயங்க அனுமதிக்கப்படுகிறது.

  எனவே, பொதுமக்கள் அத்தியாவசியப் பொருள்கள் கிடைக்காமல் போய்விடுமோ என்ற அச்சமின்றி உரிய பாதுகாப்புகளுடன் கடைகளுக்குச் சென்று உரிய சமூக இடைவெளியைப் பின்பற்றி தங்களுக்கு தேவையான பொருள்களை வாங்கிக்கொள்ளலாம்.


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Karthick S
  First published: