Home /News /tamil-nadu /

சாப்பிட முடியல, தூக்கம் இல்ல... உலகில் வாழ ஆசையும் இல்ல, வெறுப்பும் இல்ல: உடல்நிலை குறித்து நித்தியானந்தா

சாப்பிட முடியல, தூக்கம் இல்ல... உலகில் வாழ ஆசையும் இல்ல, வெறுப்பும் இல்ல: உடல்நிலை குறித்து நித்தியானந்தா

நித்தியானந்தா

நித்தியானந்தா

Nithyananda: என்னால் உணவு உட்கொள்ள முடியவில்லை.  எந்த உணவையும் வாயில் தள்ள முயன்றால் சில நிமிடங்களில் வாந்தி எடுக்கும் நிலை உள்ளது. இதே போல எனக்கு உறக்கமும் இல்லை. 24 மணி நேரமும் மூளைக்கு ஓய்வு இல்லை என நித்தியானந்தா பதிவிட்டுள்ளார்.

மேலும் படிக்கவும் ...
  கைலாசாவில் உள்ள நத்தியானந்தாவின் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியான நிலையில், தான் ஆரோக்கியமாக இருப்பதாக மருத்துவ முடிவுகள் வந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும், சாப்பிட முடியவில்லை, தூக்கம் இல்லை என்று கூறியுள்ள நித்தியானந்தா , தனக்கு உலகில் வாழ ஆசையும் இல்லை உலக வாழ்க்கை மீது வெறுப்பும் இல்லை என தெரிவித்துள்ளார்.

  பாலியல் வன்கொடுமை ,ஆட்கடத்தில் ,மோசடி என்று இந்தியாவின் பல மாநிலங்களில்  வழக்குகளில் சிக்கி , கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க தனது சில சீடர்களுடன் தலைமறைவானவர் சாமியார் நித்தியானந்தா. தற்போது கைலாசா என்ற நாட்டை ஏற்படுத்தி தனது சீடர்களுடன் நித்தியானந்தா அங்கு வசித்து வருவதாக கூறப்படுகிறது.

  கைலாசாவில் நித்தியானந்தா சகல வசதிகளுடன் வாழ்வதாக முதலில் ஒரு தோற்றம் இருந்தது. பின்னர், அங்கு கடும் வறுமை நிலவுவதாக தகவல் பரவத் தொடங்கியது. இதற்கிடையே, நித்தியானந்தாவின் உடல்நலம் பாதிக்கப்பட்டு அவர் மரணமடைந்ததாக சமூக ஊடகத்தில் தகவல் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர், அவர் உடல்நலம் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.

  இந்நிலையில், நித்தியானந்தாவின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் நேற்று அவரது உடல்நலம் குறித்து தகவல் வெளியானது. அதில், எனக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனக்கு புற்று நோய் அல்லது கட்டி எதுவும் இல்லை, இதய பிரச்சினை (18 வயது இளைஞர் இதயம்போல் ஆரோக்கியமாக உள்ளது) எதுவும் இல்லை. கொழுப்பு, கல்லீரல் பிரச்சினை, ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் என எந்த பிரச்சினையும் இல்லை.

  சிறுநீரகங்கள், நுரையீரல், குடல் சரியாக செயல்படுகிறது. கொரோனா உள்பட வைரஸ் தொடர்பான எந்த நோய்களும் இல்லை. அனைத்து உள் உறுப்புகளும் சரியாக வேலை செய்கிறது.

   அலோபதி அமைப்பின் மூலம் அனைத்து நோய் கண்டறிதல்களும் நடத்தப்பட்டுள்ளது.


  ஒரே விஷயம், என்னால் உணவு உட்கொள்ள முடியவில்லை.  எந்த உணவையும் வாயில் தள்ள முயன்றால் சில நிமிடங்களில் வாந்தி எடுக்கும் நிலை உள்ளது. இதே போல எனக்கு உறக்கமும் இல்லை. 24 மணி நேரமும் மூளைக்கு ஓய்வு இல்லை.  பத்மாசனத்தில் நான் உட்காரும்போது நிர்வி கல்ப சமாதிக்கு என் உடல் சென்று விடுகிறது. எனது நித்ய சிவ பூஜையை தவிர உடலில் எந்த இயக்கமும் தன்னிச்சையாக நடக்கவில்லை.


  என்னை கவனித்து கொண்டிருக்கும் டாக்டர்கள், சீடர்கள் என்னை கீழே படுக்க வைத்து நன்றாக மூச்சு விடும்படி வற்புறுத்துகிறார்கள். 6 மாதங்களுக்கு மேலாக என்னால் உணவு மற்றும் உறக்கம் இல்லாமல் இவ்வாறு நிர்வி கல்ப சமாதியில் இருப்பது எனக்கு வழக்கமானது தான். எனவே சீடர்கள் என் உடல் நிலை பற்றி கவலைபடத் தேவையில்லை.
  எனது கிரகங்களும், அனைத்து கிரகங்களும் எனக்கு சாதகமான நிலையில் உள்ளன. எனவே எனக்கு இப்போது மரணமோ, விதேக சமாதியோ இல்லை. இப்போது கைலாசாவில் சிறிய விமான நிலையம் உள்ளது. ஆனால் பெரிய மருத்துவமனை உள்கட்டமைப்புகள்  இல்லை.மருத்துவ கவனிப்பு போன்ற பல இயந்திரங்கள் இருந்தால் கூடுதல் கவனம் செலுத்த முடியும் என மருத்துவர்கள், பக்தர்கள் கூறுகின்றனர்.


  எனது மருத்துவ பராமரிப்பிற்காகவோ அல்லது தேவைப்படும் இயந்திரங்களுக்காகவோ எந்த பணத்தையும் அனுப்ப வேண்டாம். என் உடலை கவனித்து கொள்வதற்கு நீங்கள் அனைவரும் ஏற்கனவே போதுமானதைவிட அதிகமாக வழங்கி உள்ளீர்கள்.

  எனது பக்தர்கள் மற்றும் சீடர்கள் அனைவருக்கும் நான் சொல்ல விரும்புவது, எனது வாழ்க்கை மற்றும் நான் செய்த வேலைகளை முழுமையாக பூர்த்தி செய்துள்ளேன்.


  எனக்கு இந்த உலகில் வாழ ஆசையும் இல்லை. இந்த உலகத்தை விட்டு வெளியேறும் வெறுப்பும் இல்லை. ஞானவபி மசூதியில் சிவலிங்கம் கிடைத்த செய்தி மகிழ்ச்சி அளிக்கிறது என தெரிவித்துள்ளார்.
  Published by:Murugesh M
  First published:

  Tags: Nithyananda

  அடுத்த செய்தி