விபத்து நடந்த இடத்தில் அதிமுக கொடிக்கம்பமே இல்லை - தமிழக அரசு நீதிமன்றத்தில் தகவல்

விபத்து நடந்த இடத்தில் அதிமுக கொடிக்கம்பமே இல்லை - தமிழக அரசு நீதிமன்றத்தில் தகவல்
ராஜேஸ்வரி
  • News18
  • Last Updated: November 22, 2019, 1:38 PM IST
  • Share this:
கோவையில் அதிமுக கொடிக்கம்பத்தால் விபத்து ஏற்பட்டு இளம்பெண் தனது காலை இழந்த நிலையில், அந்த இடத்தில் கொடிக்கம்பமே இல்லை என்று தமிழக அரசு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

கோவை பீளமேடு அருகே இரு சக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த சிங்காநல்லூரைச் சேர்ந்த அனுராதா எனும் ராஜேஸ்வரி கடந்த 11-ம் தேதி காலை ஸ்கூட்டரில் பணிக்கு சென்றபோது, கோவை பீளமேடு கோல்டுவின்ஸ் பகுதியில் சாலை தடுப்பு பகுதியில் அதிமுக கட்சி கொடிக்கம்பங்கள் கட்டப்பட்டு இருந்தன. இதில் ஒரு கொடிக்கம்பம் திடீரென்று சாய்ந்ததாக கூறப்படுகிறது.

இந்த சம்பத்தின் போது நிலைத்தடுமாறிய அவர் ஸ்கூட்டருடன் சறுக்கி கீழே விழுந்துள்ளார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த லாரி ஒன்று ராஜேஸ்வரியின் கால்கள் மீது ஏறியது. இந்த கோர விபத்தில் அவரது இரண்டு கால்களும் லாரி சக்கரத்தில் சிக்கியதால் கால்கள் நசுங்கி படுகாயம் அடைந்துள்ளார்.


ராஜேஸ்வரியின் ஸ்கூட்டர் லாரி சக்கரத்துக்குள் மாட்டிக்கொண்டது. அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த விஜயானந்த் (30) என்பவரும் லாரியில் மோதி காயம் அடைந்தார். கால்கள் முறிந்து படுகாயம் அடைந்த ராஜேஸ்வரிக்கு கோவை நீலாம்பூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விபத்தில் சிக்கிய ராஜேஸ்வரியின் இடதுகால் அகற்றப்பட்டதாக மருத்துவமனை கூறியுள்ளது. இது தொடர்பான வழக்கில் இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் பதிலளித்த தமிழக அரசு வழக்கறிஞர், விபத்து நடந்த இடத்தில் அதிமுக கொடிக்கம்பமே இல்லை என்று கூறியுள்ளார்.
First published: November 22, 2019, 1:38 PM IST
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading