• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • கோயில்களில் மொட்டை அடிக்க இனி கட்டணம் இல்லை - அமைச்சர் சேகர் பாபு அறிவிப்பு!

கோயில்களில் மொட்டை அடிக்க இனி கட்டணம் இல்லை - அமைச்சர் சேகர் பாபு அறிவிப்பு!

முடி காணிக்கை

முடி காணிக்கை

மொட்டை அடிப்பதற்கு இனி கட்டணம் வசூலிக்கப்படாது எனவும் இந்த நடைமுறை நாளை (செப்டம்பர் 5) முதல் அமலுக்கு வரும் எனவும் அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.

  • Share this:
    தமிழக திருக்கோவில்களில் இனி மொட்டை அடிப்பதற்கு கட்டணம் கிடையாது என அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு அறிவித்துள்ளார்.

    இந்து அறநிலையத் துறை மீதான மானியக் கோரிக்கை கலைவாணர் அரங்கத்தில் இன்று நடைபெற்றது. அப்போது இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரான சேகர் பாபு பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.

    அதன்படி, திருக்கோவில்களில் இனி மொட்டைக்கு கட்டணம் கிடையாது, பக்தர்கள் முடி காணிக்கை செலுத்துவதற்காக மொட்டை அடிப்பதற்கு இனி கட்டணம் வசூலிக்கப்படாது எனவும் இந்த நடைமுறை நாளை (செப்டம்பர் 5) முதல் அமலுக்கு வரும் எனவும் அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.

    இந்து சமய அறநிலைய துறை அறிவிப்புகள்:

    அருட்பிரகாச வள்ளலார் புகழை போற்றும் வகையில் வள்ளலார் சர்வதேச மய்யம் வடலூரில் அமைக்கப்படும்.

    இந்து சமய அறநிலைய துறை சார்பில் சென்னை உட்பட தமிழகத்தில் பத்து இடங்களில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் 150 கோடி செலவில் தொடங்கப்படும்.

    தமிழர் திருநாளாம் தை திருநாளில் ரூபாய் 10 கோடி செலவில் அர்சகர்களுக்கு புத்தாடை மற்றும் பணியாளர்களுக்கு சீருடைகள் வழங்கப்படும்

    மணமக்களில் ஒருவர் மாற்று திறனாளியாக இருப்பின் கோயிலில் அவர்களுக்கு நடைபெறும் திருமணத்திற்கான கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது.

    கோயிலுக்கு சொந்தமான திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெற்றால் மண்டபதிற்கான பராமரிப்பு கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படும்.

    உள்ளிட்ட 112 அறிவிப்புகளை அமைச்சர் வெளியிட்டார்.

     

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Arun
    First published: