ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

15 வயதில் நோயாளியாக மனநல காப்பகம் வந்தவர்.... குணமாகியும் 50 ஆண்டுகளாக வீடு திரும்பவில்லை! ஏன் தெரியுமா?

15 வயதில் நோயாளியாக மனநல காப்பகம் வந்தவர்.... குணமாகியும் 50 ஆண்டுகளாக வீடு திரும்பவில்லை! ஏன் தெரியுமா?

குணமடைந்தவர்கள் பொருளாதார ரீதியாகவும், சமூகத்திலும் சுயமாக வாழ முடியும் என்ற நம்பிக்கையை விதைக்க பராமரிப்பு இல்லங்கள் அவசியம் என்பதே மருத்துவர்களின் யோசனை.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

கீழ்ப்பாக்கம் மனநல காப்பகத்திற்கு 15 வயதில் சிகிச்சைக்கு வந்தவருக்கு அதுவே வாழ்விடமாகியுள்ளது. காரணம் என்ன என்பது குறித்தும், குணமடைந்தவர்கள் வீடு திரும்பவதில் உள்ள பிரச்னைகள் குறித்தும் இங்கே  பார்க்கலாம்.

1969-ம் ஆண்டு பதின்பருவ சிறுவன் ஒருவர் மனநல சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு காப்பகத்தில் சேர்க்கப்பட்டார். சில முறை மட்டும் வந்து பார்த்துச் சென்ற அவரது தந்தையும், வருவதை நிறுத்தியதால் குடும்பத்துடனான உறவு முற்றிலும் அறுந்துபோனது.

குணமடைந்தாலும் எங்கு செல்வது, யாருடன் இருப்பது, இந்த சமூகத்தில் எப்படி வாழ்வது என்ற கேள்விகளுக்கு விடைகாண முடியாமல் தவித்த அவருக்கு, சிகிச்சையுடன் சேர்த்து அன்பும், அரவணைப்பும் அளித்த காப்பகமே வாழ்விடமாக மாறிப்போனது. அவருக்கு எம்.ஜி.ஆர் படங்கள் என்றால் பிடிக்கும் என்பதால், காப்பகத்தில் உள்ள அரங்கில் அவருக்காக திரையிட்டு காட்டப்படும் எனவும், வெளியில் திரையரங்கிற்கும் சென்று வருவேன் எனவும் மகிழ்ச்சியுடன் கூறுகிறார்.

இதையும் வாசிக்க: ஒரு வேளை சாப்பாட்டுக்கு கஷ்டப்பட்ட நபர் இன்று விஞ்ஞானி..! யார் அவர்?

காப்பகத்தின் அலுவல் பணிகளுக்கு உதவியாக இருந்த அவர், வயது முதிர்வால் தற்போது ஓய்வெடுத்து வருகிறார். இவரைப் போல, பல ஆண்டுகளாக காப்பக்கத்திலேயே இருக்கும் நோயாளிகள் எண்ணிக்கை குறைவு என்றாலும், குணமடைந்த நபர்களை அவரவர் வீடுகளுக்கு அனுப்பி வைப்பது சவாலான செயலாக இருப்பதாக கூறுகிறார் காப்பக இயக்குநர் பூர்ண சந்திரிகா.

கீழ்பாக் அரசு மனநல காப்பகம்

மனநல பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் சமூகத்தில் சரிசமமாக நடத்தப்பட வேண்டும் என்றால், அதற்கு சிகிச்சைகள் உள்ளன என்பதை மக்கள் மனதில் ஆழப்பதிய வைக்க வேண்டியது அவசியமாகிறது.

மனநல பாதிப்பில் இருந்து விடுபட்டவர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய பராமரிப்பு இல்லங்கள் தேவைப்படுவதாகவும் அவர் கூறுகிறார். குணமடைந்தவர்கள் பொருளாதார ரீதியாகவும், சமூகத்திலும் சுயமாக வாழ முடியும் என்ற நம்பிக்கையை விதைக்க பராமரிப்பு இல்லங்கள் அவசியம் என்பதே மருத்துவர்களின் யோசனை.

Published by:Salanraj R
First published:

Tags: Tamil Nadu