தமிழ்நாடு

  • Associate Partner
  • deepavali
  • deepavali
  • deepavali
Home » News » Tamil-nadu » NO DIWALI CELEBRATION IN THESE VILLAGES FOR LAST 65 YEARS PV

65 வருடங்களாக தீபாவளியை கொண்டாட மறுக்கும் கிராம மக்கள்... காரணம் என்ன?

65 வருடங்களாக தீபாவளியை கொண்டாட மறுக்கும் கிராம மக்கள்... காரணம் என்ன?
  • News18
  • Last Updated: October 26, 2019, 7:36 AM IST
  • Share this:
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 13 கிராம மக்கள் சுமார் 65 வருடங்களாக தீபாவளி பண்டிகையை கொண்டாடாமல் தவிர்த்து வருகின்றனர்.

வீடுகளில் பலகாரங்கள் செய்வது, புத்தாடைகள், பட்டாசுகள் உள்ளிட்டவற்றை வாங்குவது என தீபாவளியை வரவேற்க மக்கள் தயாராகி வருகின்றனர். ஆனால் அதிசயிக்கதக்க வகையில் சிவகங்கை மாவட்டத்தில் எஸ்.மாம்பட்டியை தாய் கிராமமாக கொண்ட எம் சந்திரபட்டி, எருமைப்பட்டி, ஒப்பிலான்பட்டி, தும்பைபட்டி உள்ளிட்ட 13 கிராமங்களில் தீபாவளிக்கான எந்த சுவடும் தெரியவில்லை. இவர்கள் 65 வருடங்களாக தீபாவளியை கொண்டாடுவதில்லை. ஒவ்வொரு ஆண்டும் கடன் வாங்கி தீபாவளியை கொண்டாட வேண்டியிருந்ததால் அதை தவிர்க்கும் பொருட்டு 1954-ம் ஆண்டு கிராம மக்கள் கூடி இனி தீபாவளி கொண்டாட்டம் வேண்டாம் என முடிவெடுத்தனராம். தங்கள் குழந்தைகளுக்கு தீபாவளி என்றால் என்னவென்றே தெரியாது எனக் கூறுகின்றனர் எஸ்.மாம்பட்டியை சேர்ந்த முதியோர்.

தீபாவளியை தவிர்க்கும் அதேநேரம் இந்த மக்கள் ஒவ்வொரு வருடமும் பொங்கல் விழாவை சீரும் சிறப்புமாக கொண்டாடி வருகின்றனர். அறுவடை முடிந்து மக்கள் செழிப்பாக இருப்பதால் பொங்கல் விழாவை மகிழ்ச்சியுடன் கொண்டாடுவதாக கூறுகின்றனர் இந்த கிராமங்களின் மக்கள்.


65 வருடத்திற்கு முன் எடுத்த முடிவை இன்று வரை 13 கிராம மக்கள் கடைப்பிடிப்பது அவர்களின் ஒற்றுமையின் பலத்தை பறைசாற்றுவதாக அமைந்துள்ளது.

ஐப்பசி பிறந்து விட்டாலே புத்தாடை, பலகாரம், பட்டாசு என தீபாவளி பேச்சு களைகட்ட தொடங்கிவிடும். சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவரையும் ஈர்க்கும் பண்டிகை தீபாவளி. மகிழ்ச்சி பொங்கும் இப்பண்டிகையை தொடர்ந்து 65 ஆண்டாக 13 கிராம மக்கள் கொண்டாடாமல் இருந்து வருவது வியப்பாக உள்ளது.

Also watch
First published: October 26, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading