தமிழக அரசில் ஊழல் இல்லை - பா.ஜ.க தலைவர் எல்.முருகன்

தமிழக அரசில் ஊழல் இல்லை - பா.ஜ.க தலைவர் எல்.முருகன்

எல்.முருகன், தமிழக பாஜக மாநில தலைவர்

தமிழக அரசில் ஊழல் இல்லை என்பதுதான் உண்மை என்று பா.ஜ.க தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

 • Share this:
  சென்னை பா.ஜ.க அலுவலகத்தில் எம்.ஜி.ஆரின் நினைவு நாளை முன்னிட்டு அவரது படத்திற்க்கு பா.ஜ.க மாநிலத் தலைவர் எல்.முருகன் மலர் அஞ்சலி செலுத்தினார். அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘பிரதமர் மோடி, நாளை 6 மாநில விவசாய சங்கங்களுடன் காணொளி காட்சி மூலம் பேச உள்ளார். தமிழகத்தில் 4 மாவட்டங்களில் செங்கல்பட்டு, பூம்புகார் உள்ளிட்ட இடங்களில் பிரதமர் பேச உள்ளார். இதில் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கலந்து கொள்ள உள்ளார். எஸ்றா சற்குணம் மீது காவல் துறை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். திமுக தமிழக அரசு மீது ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தி உள்ளது. அதுகுறித்து ஆளுநர் தான் முடிவு செய்ய முடியும். தமிழக அரசில் ஊழல் இல்லை என்பது தான் உண்மை’ என்று தெரிவித்தார். பெரியாரின் நினைவு நாள் குறித்து கருத்து கேட்டதற்கு பதிலளித்த பாஜக தலைவர் முருகன், ‘அவருடைய நினைவு நாள் என்று மட்டும் கூறிவிட்டு சென்றார். மு.க.அழகிரி பா.ஜ.கவுக்கு வந்தால் வரவேற்போம், பா.ஜ.க தரப்பில் அவரிடம் பேசவில்லை’ என்று தெரிவித்தார்.

  முன்னதாக, நேற்று தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை நேரில் சென்று சந்தித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அமைச்சர்கள் மீதான ஊழல்புகார் குறித்த விவரங்களை வழங்கினார்.


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Karthick S
  First published: