தமிழகத்தில் தடுப்பூசி இல்லை என்பது உண்மை - அமைச்சர் மா.சுப்ரமணியன்

மா.சுப்பிரமணியன்

தமிழகத்தில் தடுப்பூசி இல்லை என்பது உண்மை என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

 • Share this:
  சென்னை கிண்டியில் செயல்பட்டுவரும் கிங்ஸ் ஆராய்ச்சி மைய வளாகத்தில் ரூ.250 கோடி மதிப்பில் பன்னோக்கு மருத்துவமனை அமைக்கப்படும் என அன்மையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். இந்நிலையில் மருத்துவமனை அமைவதற்கான நிலம் தேர்வு செய்யும் பணிகள் தொடங்கியுள்ளது. இதனை ஆய்வு செய்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ‘47 ஏக்கர் பரப்பளவு கொண்ட கிங்ஸ் ஆராய்ச்சி மைய வளாகத்தில் காலியாக உள்ள நிலத்தை பன்னோக்கு மருத்துவமனைக்கு பயன்படுத்தப்படும் என்றார். ஏற்கனவே 8 ஏக்கர் பரப்பளவில் மருத்துவமனை கட்டடம் உள்ள நிலையில் கூடுதலாக 4 ஏக்கர் நிலத்தை மருத்துவமனை கட்ட வழங்க பொதுப்பணித்துறையிடம் கோரியுள்ளதாகவும் 12.6 ஏக்கர் பரப்பளவில் உலத்தரம் வாய்ந்த பன்னோக்கு மருத்துவமனை அமையவிருப்பதாகவும் தெரிவித்தார்

  தொடர்ந்து பேசிய அவர் அவர் தமிழகத்தில் தடுப்பூசி இல்லை என்பது உண்மை. 13ஆம் தேதிக்குள் 6.5 லட்சம் தடுப்பூசிகள் தமிழகத்திற்கு வரும் என மத்திய அரசால் பட்டியலிடப்படிருப்பதாகவும் தெரிவித்தார். ஜூன் 21 முதல் மாநிலங்களுக்கான தடுப்பூசியை விலை இல்லாமல் கொடுப்பதாக பிரதமர் அறிவித்துள்ள நிலையில் பிரதமரின் அறிவிப்பை வரவேற்பதாகவும் ஆனால் தமிழக அரசு ஏற்கனவே 100 கோடி ரூபாய் அளவிற்கு முன்பணம் செலுத்தியுள்ள நிலையில் செலுத்திய தொகைக்கு இன்னும் 18 லட்சம் தடுப்பூசி வரவேண்டியுள்ளது என்றார். இதுவரை 1,01,69,000 தடுப்பூசி வந்துள்ள நிலையில் இன்னும் 36 லட்சம் தடுப்பூசி வரவேண்டியுள்ளது என்றார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இந்தியாவில் தற்போது 7 இடங்களில் தடுப்பூசி உற்பத்தி நடைபெற்றுவரும் நிலையில் குன்னூரில் தடுப்பூசி மையத்தை ஆய்வு செய்ததாகவும் மூலப்பொருட்கள் மட்டும் கொடுத்தால் ஒரு மாதத்திற்கு ஒரு கோடி தடுப்பூசி தயாரிக்க அந்நிறுவனம் தயாராக இருப்பதாகவும் கூறினார். மத்திய அரசு மூலப்பொருட்களை தரும் பட்சத்தில் 8வது இடமாக குன்னூரில் உற்பத்தி தொடங்கலாம் என்றார். ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளநிலையில் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Karthick S
  First published: