மூன்றாவது அணிக்கு செல்ல வாய்ப்பே இல்லை - வைகோ திட்டவட்டம்

மூன்றாவது அணிக்கு செல்ல வாய்ப்பே இல்லை - வைகோ திட்டவட்டம்

வைகோ

முக கூட்டணிக் காட்சிகளை மரியாதையோடு தான் நடத்துகிறார்கள் என்றார் வைகோ.

 • Share this:
  திமுக உடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இழுபறியில் உள்ள நிலையில் மூன்றாவது அணிக்கு செல்ல வாய்ப்பே இல்லை என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

  திமுக உடனான இரண்டாம் கட்ட தொகுதி பங்கீட்டு பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏட்டபடாத நிலையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் பேச்சுவார்த்தை குழுவுடன் ஆலோசனை கூட்டம் எழும்பூரில் உள்ள அக்கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடையே பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ,

  சட்டமன்ற தேர்தலுக்கான பேச்சுவார்த்தை இணக்கமான முறையில் தொடர்ந்து கொண்டு இருக்கிறது. மதிமுக - திமுக வுடன் நம்பிக்கையோடு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது. திமுக கூட்டணிக் காட்சிகளை மரியாதையோடு தான் நடத்துகிறார்கள்.

  தொகுதி பங்கீடு குறித்து கமல் சொன்னது தவறான கருத்து. விசிக-வை திமுக மரியாதையாக தான் நடத்தியது எனவும் திமுக அடுத்தகட்ட பேச்சுவார்த்தைக்கு இன்னும் அழைக்கவில்லை எனவும் மூன்றாவது அணிக்கு செல்ல வாய்ப்பேயில்லை எனவும் தெரிவித்தார்.
  Published by:Vijay R
  First published:

  சிறந்த கதைகள்