சென்னையில் மழை நீர் தேங்கும் வாய்ப்பு இல்லை : மாநகராட்சி ஆணையர் விளக்கம்

சென்னையில் அதிக அளவு நீர் தேக்கம் உள்ள பகுதிகளை கண்டறிந்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் காரணமாக இப்போது நீர் தேக்க பகுதிகள் எதுவும் இல்லை என மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

சென்னையில் மழை நீர் தேங்கும் வாய்ப்பு இல்லை : மாநகராட்சி ஆணையர் விளக்கம்
மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்
  • Share this:
சென்னையில் பருவமழையை எதிர்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை, மெட்ரோ குடிநீர் வாரியம் உள்ளிட்ட அனைத்து சேவை துறைகளுடன் மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் ஆலோசனை நடத்தினார்.

அந்த கூட்டத்தில்,கடந்த ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட மழைநீர் வடிகால், மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள், நீர்நிலைகள் புனரமைத்தல் உள்ளிட்ட பணிகளால் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நீர் தேக்கம் முற்றிலும் குறைந்துள்ளது.

சென்னையில் உள்ள 210 நீர்நிலைகளில், 105 புனரமைக்கப்பட்டு உள்ளன. மீதமுள்ள இடங்களில் புனரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும், 3 லட்சம் அரசு மற்றும் தனியார் கட்டிடங்களில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.


மேலும் 311 சமுதாய கிணறுகள் தூர் வாரப்பட்டு அருகிலுள்ள தெருக்களின் மழைநீர் சேகரிப்பு இணைக்கப்பட்டு உள்ளன.
சென்னையில் அதிக அளவு நீர் தேக்கம் அடையக்கூடிய இடங்களாக 2015ல் 306 இடங்களும், 2017ல் 205 இடங்களும், 2018ல் 53, 2019ல் 19 இடங்களும்  கண்டறியப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க...ஊரடங்கின்போது கணக்கிடப்பட்ட கரண்ட் பில்லுக்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்தது நீதிமன்றம்

மேலும், மழைநீர் தேங்கும் வாய்ப்பு அதிகம் உள்ள 16 சுரங்க பாதைகளில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் காரணமாக தற்பொழுது நீர் தேக்கம் அடையும் இடங்கள் இல்லை என்று  மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
First published: July 16, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading