ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

தமிழகத்தில் தீபாவளி அன்று கனமழைக்கு வாய்ப்பு இல்லை - வானிலை ஆய்வுமையம்

தமிழகத்தில் தீபாவளி அன்று கனமழைக்கு வாய்ப்பு இல்லை - வானிலை ஆய்வுமையம்

மழை

மழை

Weather Update | சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    தமிழகத்தில் தீபாவளி அன்று கனமழைக்கு வாய்ப்பு இல்லை என்றும் மிதமான மழை பெய்யலம் என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

    இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வுமையம் வெளியிட்டுள்ள தகவலில்,  தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, ஈரோடு, திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

    23.10.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்

    24.10.2022 மற்றும் 25.10.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    26.10.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 32-33 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24-25 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் என்று தெரிவித்துள்ளார்.

    Also Read : பள்ளிகளுக்கு தீபாவளி மறுநாள் விடுமுறையா? அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்

    மேலும் அந்தமான் கடல் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று இன்று காலை அக்டோபர் 22ஆம் தேதி 0830 மணி அளவில் தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில், போர்ட் பிளேர்க்கு, மேற்கு- வடமேற்கு திசையில் 110 கிலோ மீட்டர் தொலைவிலும், சாகர் தீவுக்கு தெற்கு- தென்கிழக்கு திசையில் 1460 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.

    இது வடமேற்கு திசையில் நகர்ந்து மத்தியகிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் அக்டோபர் 23ஆம் தேதி காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். பின்னர் வடக்கு- வடகிழக்கு திசையில் நகர்ந்து மத்தியகிழக்கு வங்கக்கடல் பகுதியில் அக்டோபர் 24ஆம் தேதி காலை புயலாக வலுபெறக்கூடும். அதன் பின்னர் வடக்கு- வடகிழக்கு திசையில் நகர்ந்து அக்டோபர் 25ஆம் தேதி அதிகாலை வங்கதேச கடற்கரையில் டிங்கோனா தீவு மற்றும் சந்திவிப் இடையில் கரையை கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Published by:Vijay R
    First published:

    Tags: Weather News in Tamil