HOME»NEWS»TAMIL-NADU»no chance for alliance government in tamil nadu says minister jayakumar skd nan

தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை- அமைச்சர் ஜெயக்குமார் உறுதி

தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை- அமைச்சர் ஜெயக்குமார் உறுதி
அமைச்சர்கள் ஜெயக்குமார், பாண்டியராஜன், பெஞ்சமின்
  • Share this:

வீரமாமுனிவரின் 340-வது பிறந்தநாளை முன்னிட்டு மெரினா கடற்கரை அருகேஉள்ள காமராஜர் சாலையில் உள்ள அவரது சிலைக்கு தமிழக அமைச்சர்கள் ஜெயக்குமார், பாண்டியராஜன், பெஞ்சமின் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.  அதன்பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், ‘தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் முதல்வரின் கடுமையான முயற்சியால் தமிழ்நாடு முன்னேற்றப் பாதையில் இந்தியாவிலேயே சிறப்பான மாநிலமாக திகழ்ந்து வருவதாக தெரிவித்தார். தொடர்ந்த அவர், விவசாய பொருட்களை அதிக கொள்முதல் மற்றும் விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சட்டம், ஒழுங்கு மற்றும் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை சிறப்பாக செயல்படுத்துவதில் இந்தியாவில் சிறந்த மாநிலமாக தமிழகத்தை முதல்வர் உருவாக்கியிருப்பதாகவும் ஜெயக்குமார் தெரிவித்தார்.

அதேபோல் மழை நீர் கடலில் கலப்பதைத் தவிர்த்து மக்களுக்கு முழுமையாக பயன்படும் வகையில் சிறப்பான நீர் மேலாண்மை மேற்கொண்டதன் காரணமாக நாட்டிலேயே முதல் மாநிலமாக தமிழகம் தேர்வாகியுள்ளதாக தெரிவித்த அவர். அடுத்த மாதம் டெல்லியில் இது தொடர்பாக நடைபெறவுள்ள நிகழ்ச்சியில் விருது வழங்கப்படவுள்ளதாக தெரிவித்தார்.

வேல் யாத்திரையை பொறுத்தவரையில் கொரோனா காலம் என்பதால் ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்த தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில் சட்டம் தன் கடமையை செய்துள்ளது. இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் வரும் 10 ஆம் தேதி விசாரனைக்கு வர இருக்கும் சூழ்நிலையில் நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும் என்று தெரிவித்தார். ஏழு பேர் விடுதலை குறித்து திமுகவுக்கு பேச அருகதை இல்லை என்று கூறிய அவர் தொடர்ந்து தமிழக அரசு அழுத்தம் தெரிவித்து வரும் நிலையில் விரைவில் ஆளுநர் நல்ல முடிவை எடுப்பார் என தெரிவித்தார்.




வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக அறுதி பெரும்பான்மையுடன் வெற்றி பெரும். அதனால் கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை என தெரிவித்தார். மேலும் தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்க்கும் விதமாக அமெரிக்க துணை அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள கமலா ஹாரிஸுக்கு அமைச்சர் ஜெயகுமார் தனது வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டார்.
Published by:Karthick S
First published: