கடலூர் மாவட்டத்தில் நடைபெற்ற திருமண நிகழ்வில் மணமக்களுக்கு No-CAA, No-NRC என்ற வாசகம் அடங்கிய அன்பளிப்பு வழங்கப்பட்டது.
நாடு முழுவதும் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக மிகப் பெரிய அளவில் போராட்டம் நடைபெற்றுவருகிறது. தமிழகத்திலும் பல்வேறு வகைகளில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராகப் போராட்டம் நடைபெற்றுவருகிறது. கோலம், மெகந்தி மூலம் CAA, NRC-க்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர்.
இந்தநிலையில், கடலூர் மஞ்சக்குப்பம் தனியார் திருமண மண்டபத்தில் ஷஃபத்- ஷாஹின் மணமக்களுக்கு இன்று திருமணம் நடைபெற்றது. ஏராளமான உறவினர்களிடையே இந்து, கிறிஸ்துவ நண்பர்கள் பெருமளவில் பங்கேற்றனர். மணமக்களுக்கு அவரது நண்பர்கள் வழங்கிய அன்பளிப்பில், ராம், ரஹீம், ராபர்ட் அனைவரும் இந்தியர்களே. ஒருங்கிணைந்து சொல்லுவோம் No CAA, No NRC என்ற வாசகத்தை அச்சிட்டு அன்பளிப்பை வழங்கினர்.
நம்மை யாராலும் பிரிக்க இயலாது. எனவே, மக்கள் மத்தியில் சதுரங்க சடு குடு ஆட்டம் ஆடும் அரசியலை முறியடிப்போம். நாம் ஒற்றுமையாக இருப்போம். இந்துக்கள், கிறிஸ்தவர்கள் இஸ்லாமியர்கள் என்றுமே இந்தியர்களே. ஒற்றுமையே நமது பலம்... என நண்பர்கள் மணமக்களை வாழ்த்தினர். பின்னர், No-CAA, No-NRC என்ற வாசகம் அடங்கிய அன்பளிப்பு வழங்கினர்.
Also see:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.