#LIVE கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பேருந்து கிடைக்காமல் அவதி! பயணிகள் புகார்

நாளை வாக்குப்பதிவு, புனித வெள்ளி, சனி, ஞாயிறு என தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை உள்ளதால் சொந்த ஊருக்கு செல்லும் மக்கள் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் குவிந்து வருகின்றனர்.

Vijay R | news18
Updated: April 17, 2019, 7:36 PM IST
#LIVE கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பேருந்து கிடைக்காமல் அவதி! பயணிகள் புகார்
கோயம்பேடு பேருந்து நிலையம்
Vijay R | news18
Updated: April 17, 2019, 7:36 PM IST
கோயம்பேடு பேருந்து நிலையத்தில் வாக்களிக்க வெளியூர் செல்லும் பயணிகள் பேருந்துகள் கிடைக்காமல் பெரும் அவதிப்படுவதாக புகார் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் நாளை மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. மக்களவைத் தேர்தல் உடன் 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடைபெற உள்ளது.

சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்கு ஓட்டுப் போடச் செல்லும் பயணிகளுக்கு 1500 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக போக்குவரத்து துறை சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் நாளை வாக்குப்பதிவு, புனித வெள்ளி, சனி, ஞாயிறு என தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை உள்ளதால் சொந்த ஊருக்கு செல்லும் மக்கள் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் குவிந்து வருகின்றனர்.



பயணிகள் வருகை அதிகமாக உள்ளதால் பேருந்து கிடைக்காமல் பலர் அவதிப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளனர். குறிப்பாக வேலூர் , ஆற்காடு , காஞ்சிபுரம் , புதுச்சேரி, திண்டிவனம் ஆகிய ஊர்களுக்கு மிகவும் குறைவாகவே பேருந்துகள் இயக்கப்படுவதாக பயணிகள் குற்றம்சாட்டி உள்ளனர்.

Also Watch:

First published: April 17, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...