• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • காஞ்சிபுரம் அருகே பஸ் வசதி இல்லாத கிராமம்... இளைஞர்களுக்கு பெண் கொடுக்க தயங்குவதாக மக்கள் வேதனை

காஞ்சிபுரம் அருகே பஸ் வசதி இல்லாத கிராமம்... இளைஞர்களுக்கு பெண் கொடுக்க தயங்குவதாக மக்கள் வேதனை

  • News18
  • Last Updated :
  • Share this:
    காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கிராமங்களில் பேருந்து வசதிகூட இல்லாமல் மக்கள் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். இதனால் தங்கள் ஊர் இளைஞர்களுக்கு பெண் கொடுக்கக்கூட வேற்று ஊர் மக்கள் தயங்குவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

    வரலாற்றுச் சிறப்புமிக்க உத்திரமேரூரைச் சுற்றி முருக்கேரி, ஆண்டிதங்கள், நெமிலிபட்டு உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களுள் தலா ஆயிரம் குடும்பங்கள் வசித்து வருகின்றன.

    இப்பகுதியிலுள்ள மக்கள் அனைவரும் கல்வி, மருத்துவம் என எந்த அடிப்படை வசதி வேண்டுமானாலும் சுமார் 6 கிலோ மீட்டர் தூரம் கடந்து சென்றுதான் பேருந்து ஏற வேண்டும். இதனால், நாள்தோறும் மிகுந்த இன்னலுக்கு உள்ளாவதாக கூறும் மாணவிகள், பலமுறை பள்ளி, கல்லூரிக்குச் செல்ல முடியாத சூழல் ஏற்படுவதாகவும் தெரிவிக்கின்றனர்.

    மேலும், இந்த கிராமங்களிலிருந்து வெளியில் செல்ல வேண்டும் என்றால் நடந்தேதான் செல்ல வேண்டும். இருசக்கர வாகனம் இல்லாத வரியவர்களும் முதியவர்களும் இன்றும் நடந்தே செல்கின்றனர். இத்தகைய நிலையால் தங்கள் ஊரிலுள்ள இளைஞர்களுக்கு மணம் முடிக்க பெண் கொடுக்கவே வேற்று ஊர் மக்கள் தயங்குவதாக அப்பகுதி மக்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.

    பேருந்து வசதி கேட்டு பல ஆண்டுகளாக அதிகாரிகளிடம் முறையிட்டும் பயனில்லை என கூறும் இந்த கிராம மக்கள், இனியும் தங்களுக்குப் பேருந்து வசதி கொடுக்காவிட்டால் போராட்டத்தில் குதிக்க வேண்டிவரும் என எச்சரித்துள்ளனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Rizwan
    First published: