பட்டாசு வெடிக்க தடையில்லை - தீர்ப்பை வரவேற்ற பட்டாசு உற்பத்தியாளர்கள்

தீபாவளியின்போது, நாடு முழுவதும் இரவு 8 மணிமுதல் 10 மணிவரை மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். பட்டாசுகளை ஆன்லைன் முறையில் விற்பனை செய்வதற்கு தடைவிதித்தும் நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.

Web Desk | news18
Updated: October 24, 2018, 7:35 AM IST
பட்டாசு வெடிக்க தடையில்லை - தீர்ப்பை வரவேற்ற பட்டாசு உற்பத்தியாளர்கள்
பட்டாசு வெடித்து கொண்டாடும் உற்பத்தியாளர்கள்
Web Desk | news18
Updated: October 24, 2018, 7:35 AM IST
பட்டாசு உற்பத்தி மற்றும் விற்பனைக்கு தடையில்லை என்று உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்புக்கு, பட்டாசு உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். பட்டாசு விற்பனை அமோகமாக இருக்கும் என்று அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

சுற்றுச்சூழல் மாசுபாட்டுக்கு காரணமாக உள்ள பட்டாசு உற்பத்தி மற்றும் விற்பனைக்கு தடைகோரி, உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதிகள், பட்டாசு உற்பத்தி மற்றும் விற்பனைக்கு தடையில்லை என நேற்று தீர்ப்பளித்தனர். எனினும், தீபாவளியின்போது, நாடு முழுவதும் இரவு 8 மணிமுதல் 10 மணிவரை மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். பட்டாசுகளை ஆன்லைன் முறையில் விற்பனை செய்வதற்கு தடைவிதித்தும் நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.

பட்டாசு வெடிக்கத் தடையில்லை என்ற உத்தரவுக்கு வரவேற்பு தெரிவித்துள்ள சிவகாசியைச் சேர்ந்த பட்டாசு உற்பத்தியாளர்கள், பட்டாசுகளை வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதேபோல, சிவகாசி பேருந்து நிலையத்தில் பயணிகளுக்கு இனிப்புகளை வழங்கியும், பட்டாசுகளை வெடித்தும் விற்பனையாளர்கள் உற்சாகக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆண்டில் பட்டாசு விற்பனை அமோகமாக இருக்கும் என்று அவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.
First published: October 24, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...