• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • தேர்தல் அறிவித்ததால் இறுதி துணை மதிப்பீட்டில் புதிய திட்டங்களுக்கான அறிவிப்பு இல்லை: துணை முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம்

தேர்தல் அறிவித்ததால் இறுதி துணை மதிப்பீட்டில் புதிய திட்டங்களுக்கான அறிவிப்பு இல்லை: துணை முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம்

ஓ.பன்னீர்செல்வம்

ஓ.பன்னீர்செல்வம்

தேர்தல் அறிவித்ததால் இறுதி துணை மதிப்பீட்டில் புதிய திட்டங்கள் குறித்த அறிவிப்பு இல்லை என்றும் தேர்தலுக்காக 102.38 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும் துணை முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் இன்று சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார். 

  • Share this:
தமிழ்நாடு சட்டமன்றத்திற்கான பொதுத் தேர்தலை நேற்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளதால் ஜனநாயக மரபுகளை கடைபிடிக்கும் வகையில் புதிய திட்டங்கள் எதுவும் அறிவிக்கப்படவில்லை எனவும், சட்டமன்றத் தேர்தலுக்காக 102.38 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன என துணை முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் தெரிவித்தார்.

தமிழக சட்டப்பேரவையில் 2020-21 ம் ஆண்டிற்கான இறுதி துணை மதிப்பீடுகளை தாக்கல் செய்து துணை முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் பேசியதாவது, ”2020-21 ம் இறுதி துணை மதிப்பீடு களை இந்த மாமன்றத்தில் சமர்ப்பிக்கிறேன். கொரோனா பெருந்தொற்று மற்றும் இதர அவசரத் தேவைகளின் காரணமாக, அரசுக்கணக்கில் ஏற்பட்ட கூடுதல் செலவினங்கள் சார்ந்த இனங்கள் இறுதித்துணை மதிப்பீடுகளில் உள்ளடங்கும்.

ஜனநாயக மரபுகள் கடைபிடிக்க வேண்டும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். தமிழ்நாடு சட்டமன்றத்திற்கான பொதுத் தேர்தலை நேற்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்ததால் வழக்கமாக சில முக்கிய செலவினங்களின் இனங்களை குறிப்பிடுவது தற்போது உகந்ததாக இருக்காது. கூடுதல் செலவினங்களை சார்ந்த விபரங்கள் இறுதி துணை மதிப்பீட்டு புத்தகத்தில் உள்ளன.

கூடுதல் செலவினங்களின் அனைத்து இனங்களும்,  அரசு ஆணைகள் மற்றும் ஒப்புதல்கள் வழங்கப்பட்டன அல்லது அவை செயல்பாட்டில் உள்ள திட்டங்களுக்கான  கூடுதல் செலவினங்கள் தான் என்று இந்த மாமன்றத்தின் உறுப்பினர்களுக்கு உறுதியளிக்க விரும்புகிறேன் .

இறுதி துணை மதிப்பீடுகளில் எந்த ஒரு புதிய திட்டத்தின் அறிவிப்போ அரசு செலவினங்களுக்கான புதிய இனங்களோ சேர்க்கப்படவில்லை.  சட்டமன்ற தேர்தலை நடத்துவதற்காக 102.38 கோடி ரூபாய் தேவைப்படுகிறது. அந்த தொகை மட்டுமே துணை மதிப்பீடுகளில் சேர்க்கப்பட்டுள்ளது. 2021-21ம் ஆண்டிற்கு இறுதி  துணை மதிப்பீடுகள் மொத்தம் 21,172.82 கோடி நிதியை ஒதுக்கீடு செய்வதற்கும் வழி வகை செய்கின்றன. இவற்றில் 17,790.85 கோடி வருவாய் கணக்கிலும், 3,381.97 கோடி மூலதனம் மற்றும் கடன் கணக்கிலும் அடங்கும்” என பேசினார் .

மேலும் படிக்க... கொரோனாவில் இருந்து மீண்ட அமைச்சர் காமராஜ்... சட்டப்பேரவையில் உருக்கமான பேச்சு



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vaijayanthi S
First published: