முகப்பு /செய்தி /தமிழ்நாடு / நிர்மலா சீதாராமன் பேச்சில் செலவினங்களை விட கடன் பற்றிய அறிவிப்புகளே அதிகம் - சு.வெங்கடேசன் எம்.பி விமர்சனம்

நிர்மலா சீதாராமன் பேச்சில் செலவினங்களை விட கடன் பற்றிய அறிவிப்புகளே அதிகம் - சு.வெங்கடேசன் எம்.பி விமர்சனம்

சு.வெங்கடேசன், எம்.பி.

சு.வெங்கடேசன், எம்.பி.

  • Last Updated :

நிர்மலா சீதாராமனின் இன்றைய பத்திரிகையாளர் சந்திப்பில் அரசின் செலவினங்களைக் காட்டிலும் கடன் பற்றிய அறிவிப்புகளே அதிகம் உள்ளதாக மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

இது பற்றி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ”’டிரைலரின் விறு விறுப்பு முதல் ரீலில் இல்லை’ இது ஒரு சிறு தொழில் அதிபர் சங்கத் தலைவரின் கமெண்ட். கடந்த 5 ஆண்டுகளை பற்றி தங்களை தாங்களே பாராட்டிக் கொண்டு நிதியமைச்சர் அந்த பேஸ்மெண்ட் மேல் தான் எதிர்காலம் அமையப் போகிறது என்று சொல்லி இருக்கிறார். வேலை இழப்பு, சிறு தொழில் நசிவு, மக்கள் வாங்கும் சக்தி சரிவு ஆகியனதானே 5 ஆண்டு அனுபவம். அதுதான் பேஸ்மெண்ட் என்றால் கட்டடம் எப்படி ஸ்ட்ராங் ஆக இருக்கும் என்ற சந்தேகம் எழுவதை தவிர்க்க முடியுமா?

அரசின் செலவினங்கள் இதில் அதிகம் இல்லை. கடன் பற்றிய அறிவிப்புகளே அதிகம் உள்ளன. சிறு குறு நடுத்தர தொழில்கள் 3 லட்சம் கோடி ரூபாய் கடன் பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் வட்டி எவ்வளவு என்று தெரியவில்லை. இன்னும் விதி முறைகள் அறிவிக்கப்பட்டவுடன்தான் தெரியும். அரசு எவ்வளவு செலவழிக்கும் என்ற கேள்விக்கு பதில் இல்லை. எல்லாம் அரசு உத்தரவாதம், தள்ளி வைப்பு... இப்படியாக மட்டுமே உள்ளது.

அரசு கொள்முதல் பற்றி அறிவிக்கும்போது உலக ஆர்டர்களில் குறு சிறு நடுத்தர தொழில்கள் எப்படி போட்டி போட முடியும் என்ற கவலை இப்போது வந்திருக்கிறது. இதை இடதுசாரிகள் காலங்காலமாக சொல்லிக்கொண்டிருக்கிறோம். ஆனால் இவர்களுக்கு வந்துள்ள காலம் கடந்த ஞானோதயம் எவ்வளவு கை கொடுக்கும்?

புலம் பெயர் தொழிலாளர் பற்றி நாடே கண்ணீர் சிந்துகிறது. பிரதமரும் நேற்று கண்ணீர்விட்டார். ஆனால் அதைப்பற்றி இன்று எந்த அறிவிப்பும் இல்லை. இருபது லட்சம் கோடி திட்டத்தை அறிவிக்கிற உங்களால் புலம் பெயர் தொழிலாளர்களுக்கான கட்டணத்தை ஏற்றுக்கொள்ள முடியவில்லையே நிதியமைச்சர் அவர்களே!

அரசு சாதாரண மக்களுக்கு என்ன செய்யப் போகிறது? எங்கிருந்து நிதி திரட்ட போகிறது? சூப்பர் ரிச் வரி, செல்வ வரி என்று உலகம் முழுவதும் பேசப்படும்போது மூன்றாவது நாளுக்குள்ளாகவாவது

ஏதாவது அறிவிப்பீர்களா? அழகான அகப்பையை கண்களில் ஆட்டி காண்பிக்கிறீர்கள். சட்டியில் என்ன இருக்கிறது காண்பியுங்களேன்.

காத்திருக்கிறோம்... நாளைக்கு... நாளை மறு நாளைக்கு..."

இவ்வாறு அவர் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.


சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


Also see:

top videos

    First published:

    Tags: CoronaVirus, Lockdown, Minister Nirmala Seetharaman, Su venkatesan