ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

Rajinikanth Politics | திமுக, அதிமுகவுடன் கூட்டணி அமைக்கும் தவறை நான் செய்யமாட்டேன் என ரஜினிகாந்த் உறுதி - தமிழருவி மணியன் தகவல்..

திமுக - அதிமுகவுடன் ஒருபோதும் கூட்டணி அமைக்கும் "தவறை" நான் செய்யமாட்டேன் என நடிகர் ரஜினிகாந்த் உறுதி அளித்துள்ளார் என ரஜினி தொடங்கவிருக்கும் கட்சியின் மேற்பார்வையாளர் தமிழருவி மணியன் தகவல் அளித்துள்ளார்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  திமுக - அதிமுகவுடன் ஒருபோதும் கூட்டணி அமைக்கும் "தவறை" நான் செய்யமாட்டேன் என நடிகர் ரஜினிகாந்த் உறுதி அளித்துள்ளார் என ரஜினி தொடங்கவிருக்கும் கட்சியின் மேற்பார்வையாளர் தமிழருவி மணியன் தகவல் அளித்துள்ளார்.

  புதிதாக துவங்கவுள்ள கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள அர்ஜுன மூர்த்திக்கு நடிகர் ரஜினிகாந்த் வழங்கியிருக்கும் அதிகாரங்கள் குறித்த தகவல் நேற்று வெளியானது.

  2017-ம் ஆண்டு இறுதியில் அரசியலுக்கு வருவதாக அறிவித்த ரஜினிகாந்த், தற்போது 2020-ம் ஆண்டின் இறுதியில் அரசியல் கட்சியை துவங்க இருப்பதாக தெரிவித்துள்ளார். தமிழகத்தில் அவரது அரசியல் வருகைக்கு ஆரம்பம் முதலே எதிர்ப்பும், ஆதரவும் இருந்து வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த், “தமிழக மக்கள் நலனுக்காக என் உயிரே போனாலும் பரவாயில்லை. நான் வென்றால் அது மக்களின் வெற்றி, நான் தோற்றால் அது மக்களின் தோல்வி” என்று கூறியிருந்தார்.

  மேலும் தமிழக பாஜகவின் அறிவுசார் பிரிவில் தலைவராக இருந்த அர்ஜூன மூர்த்தியை தான் ஆரம்பிக்க இருக்கும் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக அறிவித்த ரஜினிகாந்த், தமிழருவி மணியனை கட்சியின் மேற்பார்வையாளராகவும் நியமித்தார். தற்போது அர்ஜூன மூர்த்திக்கு மாவட்டங்களை  உருவாக்குதல் குறிப்பாக தற்போது 38 மாவட்டத்தை 60 மாவட்டமாக பிரித்தல் உள்ளிட்ட பல்வேறு அதிகாரங்களை நடிகர் ரஜினிகாந்த் வழங்கியுள்ளார் என்ற தகவல் வெளியானது.

  அதேபோல கட்சியின் மேற்பார்வையாளர் தமிழருவி மணியனுக்கு ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளை விரிவாக்கம் செய்யும் போதும், புதிய பதவிகள் வழங்கும் போதும்  கட்சிக்குள் ஏற்படும் மனஸ்தாபம், சிக்கல்களை எவ்வாறு கையாள வேண்டும் என்ற அறிவுரைகளை வழங்கவும் ரஜினி கூறியுள்ளதாக தகவல் வெளியானது.

  தற்போது வரை இதுபோன்ற நடவடிக்கைகளை ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி சுதாகர் மேற்கொண்டு வந்தார். இனிமேல் ஒழுங்கு நடவடிக்கை குழு மூலம் எடுக்கப்படும் முடிவுகளை ரஜினிகாந்த்க்கு தெரியப்படுத்தி பின்னர் என்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் அர்ஜூன மூர்த்தி, தமிழருவி மணியன் ஆகிய இருவருக்கும் அனுமதி வழங்கியுள்ளார் ரஜினிகாந்த். விரைவில் ராகவேந்திரா திருமண மண்டபத்தில் இரண்டு முக்கிய நிர்வாகிகளுக்கான  அறைகள் தயாராகிய உடனே மண்டபத்தில் இருந்தபடி பணியாற்றுவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

  ' isDesktop="true" id="377647" youtubeid="eIT64toxgT8" category="tamil-nadu">

  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

  Published by:Gunavathy
  First published:

  Tags: ADMK, DMK, Rajini Kanth, Rajini makkal mandram, Rajini political party, Rajinikanth politics