அதிமுகவுடன் கூட்டணி இல்லை... அமமுக தலைமையில் புதிய கூட்டணி - டிடிவி தினகரன் அதிரடி

அதிமுகவுடன் கூட்டணி இல்லை... அமமுக தலைமையில் புதிய கூட்டணி - டிடிவி தினகரன் அதிரடி

டி.டி.வி.தினகரன்

திமுகவை ஆட்சிக்கு வரவிடாமல் செய்வதே தங்களின் முக்கியப் பணி எனவும் அறிவிப்பு

 • Share this:
  அதிமுகவுடன் கூட்டணி இல்லை என்றும் அமமுக தலைமையில் புதிய கூட்டணி அமைக்கப்படும் எனவும் டிடிவி தினகரன் அதிரடியாக அறிவித்துள்ளார்.

  சென்னை தி.நகர் இல்லத்தில், சசிகலாவுடன் ஆலோசனை நடத்தினார் அமமுக பொதுச்செயலளார் டிடிவி தினகரன். அதன்பின்னர் இந்த அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. மேலும், திமுகவை ஆட்சிக்கு வரவிடாமல் செய்வதே தங்களின் முக்கியப் பணி எனவும் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

  மேலும், புதிய கூட்டணி குறித்த அறிவிப்பு இரண்டு அல்லது 3 நாட்களில் வெளியாகும் எனவும் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

  இந்நிலையில், நாளை முதல் அமமுக விருப்ப மனு விநியோகம் நடைபெறும் என அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.

  அதில், 3-03-2021 முதல் 10-03-2021 வரையில் காலை 10 மணி முதல் மாலை 6 வரை விருப்ப மனு பெறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  Must Read: டிடிவி தினகரன் முதலமைச்சர் வேட்பாளர்: அமமுக பொதுக்குழுவில் தீர்மானம்

   

  விருப்ப மனுவுக்கான கட்டண தொகையாக, தமிழ்நாட்டிற்கு 10 ஆயிரம் ரூபாயும், புதுச்சேரிக்கு 5 ஆயிரம் ரூபாயும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

  இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில்,  இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
  Published by:Suresh V
  First published: