ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

அரசு மருத்துவமனையில் மருந்துகளுக்கு உறை கொடுங்கள்.. நோயாளிகளை குழப்பாதீர்கள் - சீமான வலியுறுத்தல்

அரசு மருத்துவமனையில் மருந்துகளுக்கு உறை கொடுங்கள்.. நோயாளிகளை குழப்பாதீர்கள் - சீமான வலியுறுத்தல்

சீமான்

சீமான்

மதுரை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பிய பிறகும், மிக அலட்சியத்துடன் மருந்துகள் வழங்கப்படுவது ஏழை மக்களின் உயிரோடு விளையாடும் கொடுஞ்செயலாகும் என சீமான் தெரிவித்துள்ளார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  அரசு மருத்துவமனைகளில் வழங்கப்படும் மாத்திரைகளுக்கு தனி தனி உறை வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

  இது தொடர்பாக சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு வழங்கப்படும் மருந்துகளில் வழிகாட்டு குறிப்புகளோ மாத்திரைகளுக்கான உறைகளோ ஏதுமின்றி தரப்படுவதாக தொடர்ந்து பொதுமக்கள் குற்றஞ்சாட்டி வருவது வருத்தமளிப்பதாக தெரிவித்துள்ளார். ஏற்கனவே தமிழ்நாட்டு மருத்துவமனைகளில் கடுமையான மருந்து பற்றாக்குறை நிலவி வரும் சூழலில் வழங்கப்படும் மருந்துகளும் எவ்வித குறிப்புகளும் இன்றி வழங்கப்படுவது வன்மையான கண்டனத்திற்குரியது என குறிப்பிட்டுள்ளார்.

  மேலும், மருத்துவமனை மருத்துவர்களால் நோயாளிகளுக்கு வழங்கப்படும் மருந்து குறிப்புகள் துண்டுச்சீட்டில் கிறுக்கல் கையெழுத்துடன் எழுதி தரப்படுவதால், ஏழை எளிய பாமர நோயாளிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகின்றனர். மருந்து மாத்திரைகளை எந்தெந்த வேலைகளில் உண்பது குறித்த எவ்வித தகவலுமின்றி, உறைகளுமின்றி வழங்கப்படுவதால், நோயாளிகள் குழப்பத்திற்கு ஆளாகி மருந்துகளை மாற்றி சாப்பிடும் நிலைக்கு தள்ளப்படுவதாக தெரிவித்துள்ளார்.

  இதையும் படிங்க | "மத்திய அரசு இந்தியை திணிக்கவில்லை.. அப்படி திணித்தால் தமிழக பாஜக எதிர்க்கும்" - அண்ணாமலை

  ஏற்கனவே கடந்த மார்ச் மாதம் மதுரை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பிய பிறகும், தொடர்ந்து அரசு மருத்துவமனைகளில் மிக அலட்சியத்துடன் மருந்துகள் வழங்கப்படுவது ஏழை மக்களின் உயிரோடு விளையாடும் கொடுஞ்செயலாகும் என கூறியுள்ளார்.

  ஆகவே இதற்கு மேலாவது அரசு மருத்துவமனைகளை நம்பி வரும் நோயாளிகளுக்கு முழுமையான வழிகாட்டல் குறிப்புகளுடன் மருந்துகளை தனித்தனி உறைகளில் இட்டு முறையாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

  Published by:Anupriyam K
  First published:

  Tags: Govt hospitals, Naam Tamilar Cadre, Naam Tamilar katchi, Seeman