• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • என்எல்சி சுரங்ககளில் தேங்கிய நீரை நிர்வாகம் உடனே வெளியேற்ற கூடாது

என்எல்சி சுரங்ககளில் தேங்கிய நீரை நிர்வாகம் உடனே வெளியேற்ற கூடாது

என்எல்சி

என்எல்சி

வடகிழக்கு பருவ மழையின் போது கடுமையாக பாதிக்கபடும் மாவட்டம் என்பதால், அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்படுள்ளது.

  • Share this:
கடலூரில் நடந்த வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக அனைத்து துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டத்தில், தொடர் மழை பெய்தால் என்எல்சி சுரங்ககளில் தேங்கிய நீரை நிர்வாகம் உடனே வெளியேற்ற கூடாது என கூடுதல் தலைமைச் செயலரும், வருவாய் நிர்வாக ஆணையருமான பணீந்திர ரெட்டி கேட்டுக் கொண்டுள்ளார்.

கடலூரில் கூடுதல் தலைமைச் செயலர், வருவாய் நிர்வாக ஆணையர் பணீந்திர ரெட்டி அவர்கள் தலைமையில் மாவட்ட ஆட்சியர் பாலசுப்புரமணியம் அவர்கள் முன்னிலையில் கடலூர் ஆட்சியர் அலுவலகத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக அனைத்து துறை அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தின் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பணீந்திர ரெட்டி, கடலூர் மாவட்டம் வடகிழக்கு பருவ மழையின் போது கடுமையாக பாதிக்கபடும் மாவட்டம் என்பதால் இந்த ஆண்டு பாதிப்பு ஏற்படமால் இருக்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்படுள்ளது. கடலூர் மாவட்டத்தில் தொடர் மழையால் அதிகமாக பாதிப்பு ஏற்படும் இடங்களாக 92 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. அங்கு, தேவையான வடிகால் வசதிகள் பணிகள் நடைபெற்று வருகிறது.

மேலும், தொடர் மழை காலங்களில் என்எல்சி நிர்வாகம் சுரங்களில் தேங்கியுள்ள நீரை முழுமையாக வெளியேற்ற கூடாது.
மழை குறைந்த பின்னர் அருகாமையில் உள்ள ஏரி மற்றும் ஆறுகளில் குறைந்த அளவு நீர் இருதந்தால் மட்டுமே சுரங்களில் தேங்கியுள்ள நீரை குறைந்த அளவாக படிபடியாக வெளியேற்ற வேண்டும் என கூறினார். இதனை மாவட்ட நிர்வாகம் தொடர்நது கண்காணிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

Must Read : செம்பரம்பாக்கம் ஏரியில் ஒரேநாளில் நீர் மட்டம் கிடுகிடு உயர்வு

இந்நிலையில், மாவட்ட நிர்வாகம் சார்பில், வடகிழக்கு பருவ மழையின் போது பொதுமக்களுக்கு முன் அறிவிப்பு கூறும் வகையில்,  107.8 என்ற வானொலி நிலையம் ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கி வருகிறது. அதனை பார்வையிட்ட அவர் வானொலி மூலம் பொதுமக்களுக்கு மழைகாலகங்களில் மாவட்ட நிர்வாகம் சார்பில் எடுக்கப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முன்அறிவிப்பு வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Suresh V
First published: