என்.எல்.சி. விபத்து - 2 நாட்கள் நடந்த தொழிலாளர் போராட்டம் முடிவுக்கு வந்தது

நெய்வேலி அனல்மின் நிலைய தீ விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தலா 30 லட்சம் ரூபாய் வழங்க என்.எல்.சி. நிர்வாகம் ஒப்புக் கொண்டதைத் தொடர்ந்து, 2 நாட்களாக நடைபெற்ற போராட்டம் கைவிடப்பட்டது.

என்.எல்.சி. விபத்து - 2 நாட்கள் நடந்த தொழிலாளர் போராட்டம் முடிவுக்கு வந்தது
(கோப்புப்படம்)
  • Share this:
என்எல்சி 2வது அனல் மின் நிலையத்தில் பாய்லர் வெடித்து 8 பேர் உயிரிழந்த நிலையில், 17 பேர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இதையடுத்து, 2வது அனல்மின் நிலையத்தை உடனடியாக மூட வேண்டும் என தொழிற்சங்கத்தினரும், உறவினர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, தொழிற்சங்க நிர்வாகிகள், உயிரிழந்த தொழிலாளிகளின் உறவினர்கள் ஆகியோருடன், என்.எல்.சி. நிர்வாக இயக்குநர் ராகேஷ் குமார் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார்.

Also see: 

முதற்கட்டப் பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, இரண்டாவதாக நடந்த பேச்சுவார்த்தையில் உயிரிழந்தவர்களுக்கு தலா 30 லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு தலா 5 லட்சம் ரூபாயும் நிதியுதவி வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. அதேபோல், உயிரிழந்தவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு நிரந்தர வேலை வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது.
First published: July 2, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading