முகப்பு /செய்தி /தமிழ்நாடு / Cyclone Nivar: வெள்ளத்தில் தத்தளித்த கர்ப்பிணி.. படகு மூலம் மீட்ட போலீசார்..

Cyclone Nivar: வெள்ளத்தில் தத்தளித்த கர்ப்பிணி.. படகு மூலம் மீட்ட போலீசார்..


வெள்ளத்தில் தத்தளித்த கர்ப்பிணி

வெள்ளத்தில் தத்தளித்த கர்ப்பிணி

செங்கல்பட்டு: புயல் காரணமாக தொடர்ந்து பெய்த மழையில் நிறைமாத கர்ப்பிணி மழை நீரில் தத்தளிப்பதாக கிடைத்த தகவலின் படி கூடுவாஞ்சேரி காவல்ஆய்வாளர் அசோகன் போலீசாருடன் சென்று பத்திரமாக மீட்டனர்.

  • 1-MIN READ
  • Last Updated :

நிவர் புயல் தாக்கம் காரணமாக சென்னையில் சோழிங்கநல்லூர், செம்மஞ்சேரி, மாம்பாக்கம், பெரும்பாக்கம் , சுனாமி நகர் குடியிருப்பு உள்ளிட்ட பகுதிகளில் நீர் சூழ்ந்து காணப்படுகின்றது.

இந்த பகுதிகளில் ஒவ்வொரு குடியிருப்பும் மழைநீரால் சூழப்பட்டு, தனித்தனி தீவுகளாக தெரிகின்றன. தாம்பரம் நெடுஞ்சாலை தொடங்கி செம்மஞ்சேரி வரை இதே நிலை காணப்படுகிறது. குறிப்பாக புறநகரின் மழைநீர் செம்மஞ்சேரி வழியாகவே கடலை அடைய வேண்டியிருப்பதால், செம்மஞ்சேரி அதிக அளவில் பாதிக்கப்பட்டு உள்ளது.

தாழ்வான இடமாகவும், ஏரி நீர் சூழப்படும் இடமாகவும் இருப்பதால் செம்மஞ்சேரியில் முதல் தளம் வரை தண்ணீர் நிற்கிறது. சென்னை, செம்மஞ்சேரியில் தண்ணீர் குளம்போல தேங்கி இருப்பதால் மக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.

சென்னையில் மழை நின்றாலும் பல இடங்களில் குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் வடிந்தபாடில்லை.செம்மஞ்சேரி பகுதிகளில் தண்ணீர் ஆறாய் ஓடுவதும்,குளமாய் தேங்கி நிற்பதும் மாறவில்லை.இதனால் ஏராளமான மக்கள் வீடுகளை விட்டு சாலைகளில் தான் வாழ்வை கழிக்கின்றனர்.

இதனிடையே செங்கல்பட்டு மாவட்டத்தில் நிவர் புயல் காரணமாக தொடர்ந்து பெய்த மழையால் நிறைமாத கர்ப்பிணி மழை நீரில் தத்தளிப்பதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. தகவலின் பேரில் கூடுவாஞ்சேரி காவல்ஆய்வாளர் அசோகன் போலீசாருடன்சென்று படகு மூலம் பத்திரமாக மீட்டுள்ளனர்.

இதனை தமிழக காவல் துறை ட்விட்டர் பக்கத்தில் புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளது.

உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: Cyclone Nivar, TN Police