’சேவை செய்யவேண்டும் என்ற எண்ணத்தில், மு.க ஸ்டாலின் புயல் பாதித்த பகுதியைப் பார்வையிடவில்லை’ - ராஜேந்திர பாலாஜி விமர்சனம்..

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி.

சட்டமன்ற தேர்தலைக் கருத்தில்கொண்டே புயல் பாதித்த பகுதிகளை மு.க. ஸ்டாலின் பார்வையிடுவதாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விமர்சித்துள்ளார்.

 • Share this:
  விருதுநகர்  மாவட்டம் ராஜபாளையத்தில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், ”நிவர் புயல் தாக்குதலின்போது பாதிக்கப்பட்ட பகுதிக்கு நேரில் சென்று பார்வையிட்டு கொட்டும் மழையிலும் மக்களைப் பாதுகாக்கும் முதலமைச்சராக  எடப்பாடி பழனிச்சாமி உள்ளார்.

  ஆவின் பால் புயல் பாதித்த பகுதிக்கு தங்கு தடையின்றி கிடைத்துள்ளது. பால் இல்லை என்ற பிரச்னையே இல்லாமல் புயல் பாதித்த பகுதியில் கொடுத்து வருகிறோம். புயலைப் பொறுத்தமட்டில் வரும் முன் காப்போம் என்ற முறையில் எடப்பாடியார் எடுத்திருக்கும் நடவடிக்கையை அனைவரும் பாராட்டுகிறார்கள்.

  Also read: மழை காரணமாக முட்டையின் கொள்முதல் விலை குறைந்தது..

  மு.க. ஸ்டாலின் வேறு வழியின்றி முதல்வரைப் பார்த்து  சம்பவ இடத்தைப் பார்வையிடுகிறார். அவர் சேவை செய்யவேண்டும் என்ற எண்ணத்தில் புயல் பாதித்த பகுதியைப் பார்வையிடவில்லை, தேர்தலைக் கருத்தில் கொண்டு பார்வையிட்டுள்ளார்.  ஏழை எளிய மக்களுக்காக  இருக்கக்கூடிய ஒரே ஆட்சியாக  எடப்பாடியாரின் ஆட்சி உள்ளது. இந்த ஆட்சியின் சிறப்புகளையும் மக்கள் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறார்கள். யார் உண்மையாகவே வேலை செய்கிறார்கள், யார் நடிக்கிறார்கள் என்பதை பார்த்துக் கொண்டிருக்கும் மக்கள்  சரியான நேரத்தில் சரியான பதிலடி கொடுப்பார்கள்” என்று பேசியுள்ளார்
  Published by:Rizwan
  First published: