Cyclone Nivar | நிவர் புயல் அச்சம்: டெல்டா மாவட்டங்களில் பயிர்க் காப்பீடு செய்வதற்காக கணினி மையங்களில் குவிந்த விவசாயிகள்

கோப்புப்படம்

டெல்டா மாவட்டங்களில் சம்பா நெற் பயிருக்கு இணைய தளத்தின் வழியாக பயிர்க் காப்பீடு செய்வதற்காக கணினி மையங்களில் விவசாயிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.

  • Share this:
காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி கடந்த சில ஆண்டுகளோடு ஒப்பிடுகையில் நடப்பாண்டில் அதிக பரப்பில் சாகுபடியும் அதிக நெல் கொள்முதலும் செய்யப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து சம்பா சாகுபடியை உற்சாகத்தோடு விவசாயிகள் மேற்கொண்டுள்ளனர்.

சம்பா நெற்பயிருக்கான காப்பீடு செய்ய வரும் 30- ஆம் தேதி வரை காலக்கெடு இருந்தாலும், நிவர் புயல் பாதிப்பையும் கணக்கில் கொள்ளும் வகையில் இன்றே கடைசி நாள் என்று கருதி காப்பீடு செய்ய விவசாயிகள் அதிக எண்ணிக்கையில் குவிந்தனர். நீண்ட வரிசையில் காத்திருந்து, டோக்கன் பெற்றுக் கொண்டும் காப்பீட்டிற்கான பிரிமியம் செலுத்தி வருகின்றனர்.



சாகுபடி நிலத்தின் ஆவணம் (சிட்டா அடங்கல்), வங்கி கணக்குப் புத்தகம், ஆதார் உள்ளிட்டவற்றுடன் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் கடன் பெற்றவர்களும் கடன் பெறாதவர்களும் இணையதளம் மூலம் காப்பீடு செய்துகொள்ளலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து பெரும்பாலானவர்கள் கணினி மையங்களை நோக்கி சென்றனர். அங்கும் அதிக கூட்டம், சர்வர் கோளாறு என பல மணிநேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. எனவே காப்பீட்டுக்கான காலக்கெடுவை வரும் 10-ஆம் தேதி வரை நீீட்டிக்கவேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
Published by:Rizwan
First published: