நிதி ஆயோக் வெளியிட்ட ஏற்றுமதிக்கான தயார்நிலை குறியீடு - தேசிய அளவில் மூன்றாமிடத்தில் தமிழகம்..

கடலோர மாநிலங்கள் இந்த குறியீட்டில் சிறந்து விளங்குகின்றன. குஜராத், மகாராஷ்டிரா மற்றும் தமிழ்நாடு ஆகியவை முதல் மூன்று இடங்களை பிடித்துள்ளன.

நிதி ஆயோக் வெளியிட்ட ஏற்றுமதிக்கான தயார்நிலை குறியீடு - தேசிய அளவில் மூன்றாமிடத்தில் தமிழகம்..
ஏற்றுமதி தயார்நிலை குறியீடு
  • Share this:
ஏற்றுமதி தயார்நிலைக் குறியீடு 2020 குறித்த அறிக்கையை நிதி ஆயோக் வெளியிட்டுள்ளது. இதில் குஜராத், மகாராஷ்டிரா மற்றும் தமிழ்நாடு ஆகியவை முதல் மூன்று இடங்களைப் பிடித்துள்ளன

ஏற்றுமதி தயார்நிலைக் குறியீடு 2020-ஐ Think Tank நிறுவன அறிக்கை இன்று வெளியிட்டது. ஏற்றுமதிக்கான தயார்நிலைதன்மை மற்றும் அதில் மாநிலங்களின் செயல்பாடுகளைப் பற்றிய தகவல்களைத் தரும் அறிக்கை இது. சவால்கள் மற்றும் வாய்ப்புகளைக் கண்டறிதல், அரசுக் கொள்கைகளின் திறனை மேம்படுத்துதல் மற்றும் ஒழுங்குமுறைக் கட்டமைப்பை ஊக்குவிப்பது ஆகியவற்றை நோக்கங்களாகக் கொண்டது இந்த அறிக்கை.

மேலும் படிக்க: ரூபாய் நோட்டுகள் குறித்து கணக்கெடுப்பு நடத்துகிறது ரிசர்வ் வங்கி: மக்களின் விருப்பத்தை அறிய ஆய்வு.. முழுவிவரம்..


கடலோர மாநிலங்கள் இந்த குறியீட்டில் சிறந்து விளங்குகின்றன. குஜராத், மகாராஷ்டிரா மற்றும் தமிழ்நாடு ஆகியவை முதல் மூன்று இடங்களை பிடித்துள்ளன. ஏற்றுமதிகளை ஊக்குவிப்பதற்கான வசதியை அளிக்கும் பலமான காரணங்களை பிரதிபலிக்கும் விதமாக எட்டு கடலோர மாநிலங்களில் ஆறு மாநிலங்கள் முதல் பத்து இடங்களில் இருக்கின்றன.மற்ற மாநிலங்களைப் பொருத்தவரையில், ராஜஸ்தான் முதலிடத்திலும், அதைத் தொடர்ந்து தெலங்கானா மற்றும் ஹரியானாவும் இடம்பெற்றுள்ளன. ஹிமாலய மாநிலங்களில், உத்தரகாண்ட் முதலிடத்திலும், அதைத் தொடர்ந்து திரிபுரா மற்றும் இமாச்சலப் பிரதேசமும் இருக்கின்றன. யூனியன் பிரதேசங்களில், டெல்லி சிறந்து விளங்குகிறது, அதைத் தொடர்ந்து கோவா மற்றும் சண்டிகர் இடம்பிடித்துள்ளன.
First published: August 27, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading