”நோ சூடு நோ சொரணை”: தம்பதிக்கு வாழ்த்து - நியூஸ் 18க்கு நன்றி சொன்ன நித்தியானந்தா!

”நோ சூடு நோ சொரணை”: தம்பதிக்கு வாழ்த்து - நியூஸ் 18க்கு நன்றி சொன்ன நித்தியானந்தா!
திருமண போஸ்டர்
  • News18 Tamil
  • Last Updated: February 15, 2020, 12:17 PM IST
  • Share this:
திருச்சி மாவட்டம் லால்குடி அடுத்து பூவாளூர் அருகே பல்லவபுரம் கிராமத்தில் நடைபெற்ற திருமணம் ஒன்றில் வைக்க பட்டு இருந்த பேனரில் நித்தியானந்தா புகைப்படம் இடம் பெற்றிருந்தது.

இந்த பேனரை திருமணத்துக்கு வந்த பலரும் ஆச்சர்யத்துடன் பார்த்துச் சென்றனர். ‘நோ சூடு நோ சொரணை’ என்று அமைக்க பட்டு இருந்த இந்த பேனர் குறித்து பதிலளித்த அவர்கள்,

‘நோ சூடு நோ சொரணை’ என்று நித்தியானந்தா அடிக்கடி கூறுவார். அது எங்களுக்கு பிடித்துள்ளது. எங்களுக்கு மனதில் தோன்றுவதை நித்தியானந்தா போன்று நாங்களும் செய்து கொண்டு இருக்கிறோம். அவரைப் போல் குறுகிய காலத்தில் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று நாங்களும் ஆசைப்படுகிறோம்” என்றனர்.


இந்தச் செய்தியை நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சியில் முதலில் வெளியிட்டோம் - நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியில் செய்தியை பார்த்து மணமக்களை வாழ்த்திய நித்தியானந்தா, ”என் அளவிற்கு அடிவாங்கியவர்கள் யாரும் கிடையாது. என்னை அடித்து பழகாத ஆளே கிடையாது. ஆனால் இத்தனை ரணகளத்திற்கு நடுவிலும் இந்த 21 வருடத்தில் நான் 1,200 ஆசிரமங்கள் உருவாக்கியுள்ளேன். 120 நாடுகளில் நித்தியானந்தா சங்கம் நடக்கின்றது.

வந்த நோக்கம், சொந்த நோக்கம் , எந்த நோக்கமோ அந்த நோக்கின் போக்கை விட்டு யாருமே என்னை மாற்ற முடியாத வாறு பரமசிவ பரம்பொருளே வாழ்க்கை என வந்த நோக்கத்தை நோக்கி நான் சென்று கொண்டே இருப்பதற்கான ஒரே காரணம் நோ சூடு நோ சுரணை ஒன்லி பரமசிவ.

பல்லவபுரம் கைலாச வாசிகளுக்கு எனது இனிமையான அன்பும், ஆசியும் . அவர்களது உணர்வுகளை வெளிப்படுத்த வாய்ப்பளித்த நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சிக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் என கூறியுள்ளார்.வீடியோ:

First published: February 15, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading