'கைலாசா’ தனிநாடு அந்தஸ்து கேட்டு ஐ.நா சபையை நாடிய நித்யானந்தா..!

'கைலாசா’ தனிநாடு அந்தஸ்து கேட்டு ஐ.நா சபையை நாடிய நித்யானந்தா..!
  • News18
  • Last Updated: December 4, 2019, 9:59 AM IST
  • Share this:
தனக்கு எதிராக சர்வதேச சதி நடப்பதாகவும், ஆனால், களத்தில் இறங்கி கடவுள் தன்னை காப்பாற்றி வருவதாகவும் வீடியோவில் நித்யானந்தா தெரிவித்துள்ளார்.

ஆன்மீக உலகமே தற்போது நித்யானந்தாவின் தனிநாடு விவகாரம் குறித்து தான் விவாதித்துவருகிறது. தென் அமெரிக்க நாடான ஈக்வடார் அருகே குட்டி தீவை விலைக்கு வாங்கிய நித்யானந்தா, தனிநாடு அந்தஸ்து கேட்டு ஐக்கிய நாடுகள் அவையை நாடியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த சட்ட நிறுவனத்தின் உதவியுடன் தனிநாடு அமைக்கும் பணியில் நித்யானந்தா மும்மரமாக செயல்பட்டுவருகிறார் என்கிறார்கள் விபரம் அறிந்தவர்கள்.


அதே சமயம், செவ்வாய் கிழமையன்று நித்யானந்தா வெளியிட்டுள்ள வீடியோவில், பரபரப்பான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். தனக்கு எதிராக சர்வதேச சதி நடப்பதாக பகீர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

”என் மீதும், சங்கத்தின் மீதும் நடத்தும் தாக்குதல் திட்டமிட்ட குற்றம். பணம் வாரி இறைக்கப்பட்டுள்ளது; பல்வேறு வியூகங்கள் வகுக்கப்பட்டிருக்கின்றன. இதில் ஒரு நல்ல விஷயம் என்னவென்றால், எனக்கு எதிரான அனைத்து செயல்களும் ஆவணப்படுத்தப்படுகின்றன. சர்வதேச சமூகம் அதைக் கவனித்துக் கொண்டிருக்கிறது “ என்று வீடியோவில் கூறியுள்ளார்.

தன்னையும், தனது பீடத்தையும் கடவுளே களம் இறங்கி நேரடியாக காத்துவருவதாகவும் நித்யானந்தா புளகாங்கிதம் அடைந்தார். தானொரு புறம்போக்கு, பரதேசி என திடீரென பேசிய நித்யானந்தா, அதற்கு புதிய விளக்கத்தையும் கொடுத்துள்ளார்.இந்த சர்வத்தில் தன்னை பயமுறுத்த எவராலும் முடியாது என்று தெரிவித்துள்ளார்.சில தினங்களுக்கு முன்பு, தான் ஒரு நெருப்பு ஆறு என்று சுயவர்ணனை செய்து, இறுதியில் வடிவேலுவின் சூணா பாணா பஞ்சாயத்து முடிந்துவிட்டது கிளம்பு என தனது பேச்சை முடித்தார்.
First published: December 4, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading