ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

அமெரிக்கன் சிட்டி கூட ஒப்பந்தமாம்.. மாஸ் காட்டும் நித்தியானந்தா.. கைலாசா அடுத்த அப்டேட்

அமெரிக்கன் சிட்டி கூட ஒப்பந்தமாம்.. மாஸ் காட்டும் நித்தியானந்தா.. கைலாசா அடுத்த அப்டேட்

நித்யானந்தா

நித்யானந்தா

நித்யானந்தாவின் கைலாசாவை நாடாக அமெரிக்க நகர நிர்வாகம் அங்கீகரித்து ஒரு ஒப்பந்தம் வேறு கையெழுத்தாகி இருக்கிறதாம்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Chennai [Madras], India

நித்யானந்தா... டிஜிட்டலில் உலாவும் பலருக்கு கண்டெண்ட் கொடுத்து காக்கும் கடவுள். திருவிளையாடல் படபாணியில் சொன்னால் பிரிக்க முடியாதது நித்தியும் அவரது சீடர்களையும்.. சேர்ந்து இருப்பது நித்தியும் சர்ச்சையும் என்ற அளவுக்கு கண்டெண்டுகளை வாரி வழங்கிக்கொண்டிருக்கிறார். பாலியல் வழக்கில் நித்தியானந்தாவை போலீஸ் தேடி வர 2018-ல் தலைமறைவானார். அதன்பின் ஷோஷியல் மீடியாக்களில் தான் மீட்டிங்-கே போடுகிறார்.

தனித்தீவு ஒன்றை குத்தகைக்கு எடுத்த நித்தியானந்தா “இது தான் நாடு.. நான் தான் அதிபர்” என ஒரு அதிரடி அறிவிப்பும் வெளியிட்டார். நாடு பெயர் தெரியும்ல்ல கைலாசா. இந்த நாடு எங்கிருக்கு தெரியாது. ஒரு போட்டோவும் வந்ததில்லை.. அடிக்கடி நித்தி தான் கிராபிக்ஸ் பண்ணி சில சொற்பொழிவு வீடியோக்களை பதிவு செய்வார்.இந்த சொற்பொழிவும் இணையத்தில் ஹிட் அடிக்கும்.

இது எல்லாம் தெரிஞ்ச விஷயம் தானே சொல்றீங்க.. சரி நாங்க சொல்ல வந்த விஷயத்துக்கே வர்றோம். கைலாசா ஒரு கட்டுக்கதைன்னு சொல்லி வர.. அடிச்சான் பாரு அப்பாய்மெண்ட் ஆர்டர் என கைலாசா பத்தி ஒரு அப்டேட் வந்திருக்கு.

கைலாசாவை நாடாக அமெரிக்க நகர நிர்வாகம் அங்கீகரித்து இருப்பதாக நித்தியானந்தா தன்னுடைய ட்விட்டரில் ட்வீட் செய்திருக்கிறார். இந்த சம்பவம் ஜனவரி 11-ம் தேதி நடந்ததாம்.

கைலாசா நாட்டை இறையான்மை பெற்ற நாடாக அங்கீகரிச்சு இருக்கு அமெரிக்காவின் நெவார்க் நகர நிர்வாகம். இருதரப்பு மக்களோட மேம்பாட்டுக்கு தேவையான வளர்ச்சி திட்டங்கள் தொடர்பாக ஒப்பந்தம் கையெழுத்தாகி இருப்பதாக ட்வீட் சொல்கிறது.

நியூ ஜெர்சி மாகாணத்தில் உள்ள நெவார்க் நகரத்தின் சார்பில் அதன் மேயரும் கைலாசாவின் தூதர் விஜயப்பிரியா நித்யானந்தாவும் புரிந்துணர்வு ஒப்பந்ததில் கையெழுத்துபோட்டிருக்காங்களாம். அடுத்த சொற்பொழிவுல நித்திகிட்ட இருந்து இதுதொடர்பா மேலும் அப்டேட் எதிர்பார்க்கலாம்.

First published:

Tags: Nithyanandha, Tamil News