ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

8 சாதனைகள் படைத்து ஆசிய புக் ஆப் ரெக்கார்ட்ஸில் இடம்பெற்ற நித்தியானந்தா... கைலாசா அறிவிப்பு

8 சாதனைகள் படைத்து ஆசிய புக் ஆப் ரெக்கார்ட்ஸில் இடம்பெற்ற நித்தியானந்தா... கைலாசா அறிவிப்பு

நித்தியானந்தா

நித்தியானந்தா

கைலாசா என்ற நாட்டை நித்தியானந்தா அறிவித்தாலும் இதுவரை கைலாசா எங்கிருக்கின்றது என்பது மர்மமாகவே உள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  தலைமறைவாக உள்ள சாமீயார் நித்தியானந்தா 8 சாதனைகளை நிகழ்த்தி உள்ளதாகவும் இவை ஆசிய புக் ஆப் ரெக்கார்ட்ஸில் இடம் பெற்றுள்ளதாகவும் கைலாசாவின் அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் தகவல் பகிரப்பட்டுள்ளது.

  பாலியல் வன்கொடுமை, ஆட்கடத்தல், மோசடி என்று இந்தியாவின் பல மாநிலங்களில் வழக்குகளில் சிக்கி கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க தனது சில சீடர்களுடன் தலைமறைவானவர் சாமியார் நித்தியானந்தா.

  தொடர்ந்து, தனித் தீவு ஒன்றை குத்தகைக்கு எடுத்து, அதனை கைலாசா என்ற தனி நாட்டை உருவாக்கி இருப்பதாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார். கைலாசா என்ற நாட்டை அறிவித்தாலும் இதுவரை கைலாசா எங்கிருக்கின்றது ,என்பதையும் அங்கு அவர் வாழும் வாழ்வியல் முறை பற்றியும் எந்த புகைப்படத்தையும் வெளியிட்டதில்லை.

  அமெரிக்க தலைநகர் நியூயார்க்கில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் 77-வது பொதுச்சபை கூட்டத்தில்  கைலாசா சார்பில், ஐ.நா. சபையின் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள விஜயபிரியா நித்தியானந்தா என்பவர் கலந்துகொண்டார்.பல்வேறு நாட்டு தலைவர்களை சந்தித்து பேசிய அவர், கைலாசாவின் அரசியல் சாசனம் என்று கூறப்படும் பகவத் கீதையின் முன்னுரையையும் வழங்கி பரபரப்பை ஏற்படுத்தினார்.

  இந்நிலையில், நித்தியானந்தா 8 சாதனைகளை படைத்துள்ளதாகவும் அவை ஆசிய புக் ஆப் ரெக்கார்ட்ஸ் மூலம் ஏற்கப்பட்டுள்ள அங்கீகரிக்கப்பட்டுள்ளதாகவும் கைலாசா ஃபேஸ்புக் பக்கத்தில் தகவல் பகிரப்பட்டுள்ளது. அதன்படி,

  இதையும் படிங்க: மனநல காப்பகத்தில் மலர்ந்த காதல்.. மணக்கோலத்தில் காதல் ஜோடி!

  ஒரு மணி நேரத்தில் அதிக வசனங்களை உச்சரித்தது, ருத்ர மந்திரத்தை அதிக நேரம் உச்சரித்தது, உயிருடன் வாழும் ஒருவருக்கு அதிக பாடல்களை அர்ப்பணித்தது, ஒரு ஆசிரியரால் வெளியிடப்பட்ட அதிகபட்ச புத்தகங்கள், ஒரு குழுவால் செய்யப்படும் அதிகபட்ச பாரம்பரிய ஆசனங்கள், ஆன்மிக அமைப்பால் கொண்டாடப்பட்ட அதிகபட்ச பிரம்மோத்ஸவங்கள், ஒரு குழுவால் பத்மாசன யோகா ஆசனத்தை நடத்துவதற்கான நீண்ட காலம் மற்றும் ஒரு தனிநபரால் அதிக நேரம் பொது சொற்பொழிவு வழங்கியது ஆகிய சாதனைகளை அவர் படைத்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

  Published by:Murugesh M
  First published:

  Tags: Nithiyanadha