பாலியல் வன்கொடுமை, ஆட்கடத்தல், மோசடி என்று இந்தியாவின் பல மாநிலங்களில் வழக்குகளில் சிக்கி கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க தனது சில சீடர்களுடன் தலைமறைவானவர் சாமியார் நித்தியானந்தா. தொடர்ந்து, தனித் தீவு ஒன்றை குத்தகைக்கு எடுத்து, அதனை கைலாசா என்ற தனி நாட்டை உருவாக்கி இருப்பதாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார். கைலாசா என்ற நாட்டை அறிவித்தாலும் இதுவரை கைலாசா எங்கிருக்கின்றது ,என்பதையும் அங்கு அவர் வாழும் வாழ்வியல் முறை பற்றியும் எந்த புகைப்படத்தையும் வெளியிட்டதில்லை.
ஆனால் கிராப்பிக் செய்யப்பட்ட பின் திரைக்கு முன்னாக அமர்ந்துக்கொண்டு தனது சீடர்களுக்கு ஆன்மீக சத்சங் என்ற யூடியூப் நேரலை சொற்பொழிவை பேசிவந்தார். இப்படி கொரோனா காலகட்டத்தில் நித்தியானந்தா அவரது யூடியூப் பக்கத்தில் பேசிவந்தது மிகபிரபலம் . நித்தியானந்தாவின் இப்படி பட்ட பேச்சுகள் இணையத்தில் வைரலாகி கைலாசாவில் நித்தி ஜாலியாக இருக்கிறார் போல என்ற தோற்றத்தை ஏற்படுத்தியது. இதனிடையே, கடந்த 3 மாதங்களாக நித்தியானந்தா நேரலையில் தோன்றவில்லை.
இதைத்தொடர்ந்து, அவரது உடல்நிலை குறித்து பல்வேறு சர்ச்சையான கருத்துக்கள் வெளியானது. எனினும், அவை புரளி எனவும், நான் ஆழ்ந்த சமாதி நிலையில் இருப்பதாகவும் நித்யானந்தா தனது அதிகாரப்பூர்வ வலைதள பக்கத்தில் பதிவிட்டார். அதன்பிறகு சமாதி நிலையில் இருந்து பேசுவதாக கூறி, தொடர்ந்து சில கருத்துக்களையும் பதிவிட்டிருந்தார்.
Also Read : நன்றி சொல்ல வந்த அமைச்சர் சிவசங்கர்... மக்கள் செய்த காரியத்தால் பரபரப்பு
இந்நிலையில் தற்போது புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் 10 லட்சம் பேரை திரட்டி சன்யாச படையை உருவாக்கியே தீருவேன் என சபதமிட்டுள்ளார். அவர் அந்த வீடியோவில் பல விஷயங்கள் குறித்து பேசி உள்ளார். அந்த வீடியோவில் எனக்கு வயசு 44 ஆகிறது. நான் சாதிக்காததுமில்லை சந்திக்காதாதுமில்லை. பல பிரச்னைகளை சந்திப்பதால் ஒருவித ஷிரத்தன்மை என்னுள் வந்துள்ளது. ஒரு தலைவனுக்கு வலி தாங்கும் தன்மைதான் வலிமை. 10 லட்சம் பேரை சேர்ந்த சன்யாச படை நான் உருவாக்கி பரமேஸ்வரன் பாதத்தில் சமர்பித்தே தீர்வேன். பரமசிவன் அருளால் இதை செய்து முடிப்போம் என்றுள்ளார். நித்யானந்தாவின் இந்த வீடியோவும் பல கமெண்ட்களையும் பெற்று வருகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Nithyananda