இந்தியாவில் கொரோனா 3-வது அலை இந்த தமிழ் மாதத்தில் தாக்கும் - தலைமறைவு சாமியார் நித்யானந்தா ஆருடம்

Youtube Video

கொரோனாவின் மூன்றாவது அலை விரைவில் இந்தியாவை தாக்க உள்ளதாக தலைமறைவு சாமியார் நித்தியானந்தா புதிய ஆரூடம் ஒன்றை சொல்லியுள்ளார் .

  • Share this:
    கொலை, கொள்ளை, ஆட்கடத்தல், ஆண் சீடர் பாலியல் புகார், மோசடி என்று பல வழக்குகளில் சிக்கியவர் சாமியார் நித்தியானந்தா. ஒரு லோக்கல் ரவுடி சிக்கக்கூடிய அனைத்து வழக்குகளிலும் சிக்கியுள்ள போதும் தான் கடவுளின் அவதாரம் என்று சொல்லிகொண்டு வருகின்றார் நித்தி.

    இந்தியாவில் தன்னை பார்க்க இத்தனை லட்சம், தனக்கு பாத பூஜை செய்ய இத்தனை லட்சம், தன்னிடம் ஆசி பெற இத்தனை லட்சம் என்று நாள் தோரும் பல கோடிகளை சம்பாதித்து குவித்து வந்தார் நித்தியானந்தா. எப்படியும் மாட்டிக்கொள்வோம் என்று சம்பாதித்த பல கோடி ரூபாயுடன் இந்தியாவில் இருந்து தப்பித்து நான்கு ஆண்டுகளுக்கு மேலாக தலைமறைவு வாழ்வு வாழ்ந்து வருகின்றார்.

    தலைமறைவு வாழ்வு வாழ்ந்து வந்தாலும் யூடியுப் மூலமாக சத்சங் என்று சொல்லக்கூடிய ஆன்லைன் மூலமாக வலைதளங்களில் தொடர்ந்து பேசிவருகின்றார் நித்தியானந்தா. இவரது பேச்சை கேட்கும் நெட்டிசன்கள் அவற்றை கலாய்த்து தள்ளுவதும் அதற்கு தான் ஒரு புறம்போக்கு ,பரதேசி என்னை ஏன் கிண்டல் செய்கிறீகள் என்று விரக்தியின் உச்சத்தில் அவர் பேசுவது பிரபலம்.

    Also Read : கத்தி முனையில் 6 பேரால் கூட்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட 12ம் வகுப்பு மாணவி!

    தன்னை அவதாரம் என்று சொல்லிகொண்டவர் பிறகு நானே சிவன், நானே பார்வதி, நானே விஷ்னு, கருப்பு சாமி ,மினாட்சி என்று சொல்லிக்கொண்டு போடாத ஆட்டம் இல்லை, வேசம் இல்லை. இந்த கொரோனா காலத்தில் சாமியார் ஆரம்பித்துள்ள புதிய லீலை, குறி சொல்லும் அம்மன் வேடம்.

    கண்களுக்கு மை விட்டுக்கொண்டு முன்னும் பின்னும் ஆடியவாரு கண்களை சிமிட்டி சிமிட்டி பேசுவது தான் அது . அப்போது மகமாயி, மீனாட்சி,காளி அம்மன் போன்ற பெண்தெய்வங்கள் பெயரில் குறிகேட்கும் தனது சீடர்களுக்கு குறி சொல்லி வருகின்றார் நித்தி.

    Also Read : ஆன்லைனில் வறுத்த கோழி ஆர்டர் செய்த பெண்ணுக்கு வறுத்த டவல் டெலிவரி

    சில நாட்களுக்கு முன்பு தன்னுடைய கால் இந்தியாவில் பட்டால் தான் கொரோனா இந்தியாவை விட்டு போகும் என்று குறி சொல்லியிருந்தார். விரைவில் கொரோனாவின் மூன்றாவது அலை புரட்டாசி மாதம் தாக்க உள்ளதாக புதிய குண்டை போட்டுள்ளார் நித்தியானந்தா. அவற்றில் இருந்து தப்பிக்க அனைவரும் தனது கர்நாடக ஆசிரமத்தில் போய் தஞ்சம் அடைவதே ஒரே வழியென்று ஒரே போடாக போட்டுள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    மற்றொரு வீடியோவில் கொரோனா தாக்கும் என்று தனக்கு பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு முன்பே தெரியும் என்றும் அதற்காக தான் ஆசிரமம் அமைத்தேன் என்றும் தனது யூடியுபில் அள்ளி விட்டுள்ளார். கொரோனா காலத்தில் இதையும் தாங்கி கொள்வோம் என்று நெட்டிசன்கள் நித்தியின் புதிய வீடியோக்களை கொண்டாடி வருகின்றனர்.
    Published by:Vijay R
    First published: