இந்த 3 மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கு கைலாசாவில் முன்னுரிமை - நித்யானந்தா ஸ்பெஷல் ஆஃபர்

கைலாசா நாட்டின் நாணயங்களை அறிவித்த நித்யானந்தா, மதுரையைச் சேர்ந்த ஓட்டல் மற்றும் திருச்சியைச் சேர்ந்த பிரபல ஜவுளிக் கடை ஆகியோருக்கு கைலாசா நாட்டில் தொழல் தொடங்கவும் அனுமதி அளித்துள்ளார்.

  • Share this:
எங்கே இருந்தாலும் கவலையில்லாமல் இருப்பதில் நித்யானந்தாவை யாராலும் வெல்லமுடியாது. கவலையற்ற மனிதரான அவர், தனது நாட்டின் அடுத்தடுத்த உருவாக்கங்களில் களமிறங்கியுள்ளார்

பல்வேறு சர்ச்கைகளில் சிக்கி அகமதாபாத் போலீசாரால் குற்றவாளியாகத் தேடப்பட்டு வருகிறார் நித்யானந்தா. கைலாசா என்ற தனி நாட்டை உருவாக்கி விட்டதாக அவர் அறிவித்ததும், பாஸ்போர்ட் விண்ணப்பிக்கப் போவதாக வெளிப்படையாக பலர் சமூக வலைதளங்களில் பதிவிடத் தொடங்கினர் கைலாசாவிற்கான நாணயத்தை விநாயகர் சதுர்த்தி அன்று அறிவிக்கப் போவதாக கூறி, அதன்படியே கால் காசு முதல் 10 பைசா வரையிலான 5 வகையான நாணயங்களை அறிமுகப்படுத்தியுள்ளார்.

இது ஒருபுறம் இருக்க, மதுரையில் இருந்து குமார் என்பவர், கைலாசா நாட்டில் தனது ஓட்டலைத் தொடங்க அனுமதி வேண்டும் என நித்யானந்தாவுக்கு கடிதம் எழுதினார். அதில், மக்களை ஈர்க்க நித்யானந்தா எப்படி புது உத்திகளைக் கையாள்கிறாரோ அதேபோல், தாங்களும் மாஸ்க் புரோட்டா, கொரோனா தோசை என பல வித புதிய உணவுகளைத் தயாரித்து வருவதாக கூறியுள்ளார்.


Also Read : மனைவி குளிப்பதை எட்டிப்பார்த்த நபருக்கு காது கிழிய அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்த புதுமாப்பிள்ளை

அதேபோல் திருச்சியைச் சேர்ந்த நியூசாரதாஸ் என்ற ஜவுளிக்கடை உரிமையாளரும் கைலாசா நாட்டில் தொழில் தொடங்க அனுமதி கோரியுள்ளார். இவர்களுக்கு அனுமதி வழங்கும்படி உத்தரவிட்டுள்ளதாகவும் விரைவில் அனைத்து தொழில்களும் கைலாசாவில் தொடங்கப்படும் எனவும் நித்யானந்தா கூறியுள்ளார்

அதேநேரம், தனது நாட்டிற்கு வருகை தரும் மக்களில் திருவண்ணாமலை, மதுரை, காஞ்சிபுரம் ஆகிய 3 ஊர்களுக்கு முன்னுரிமை அளிக்கப் போவதாகவும் கூறியுள்ளார். தனது வெப் கேமரா சிக்னலை வைத்து கைலாசா எங்கிருக்கிறது என தேடுவார்கள் என்று கூறி தனக்கே உரிய சிரிப்பை உதிர்த்துள்ளார் நித்யானந்தா.கொரோனாவால் உலகமே பீதியடைந்து ஒடுங்கிக் கிடக்கும் நிலையிலும், கைலாசா நாட்டைப் பற்றி பேசிப் பேசியே பிரபலப்படுத்தி வருகிறார் நித்யானந்தா., கைலாசாவை அவர் கண்ணில் காட்டுவாரா என்பதே இப்போது எழுந்துள்ள மிகப் பெரிய கேள்வி.
First published: August 24, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading