ரிசர்வ் பேங்க் ஆஃப் கைலாசா உருவாக்கம்; விநாயகர் சதுர்த்தி அன்று முக்கிய அறிவிப்பு - நித்யானந்தா

விநாயகர் சதுர்த்தி அன்று கைலாசா நாடு தொடர்பாக முக்கிய அறிவிப்புகளை வெளியிட உள்ளதாக நித்யானந்தா தெரிவித்துள்ளார்.

ரிசர்வ் பேங்க் ஆஃப் கைலாசா உருவாக்கம்; விநாயகர் சதுர்த்தி அன்று முக்கிய அறிவிப்பு - நித்யானந்தா
நித்யானந்தா
  • Share this:
பாலியல் வன்கொடுமை வழக்கில் இருந்து கொலை வழக்கு வரை சிக்கியவர் சாமியார் நித்தியானந்தா. கைலாசா நாடு அமைக்க போவதாக கூறிக்கொண்டு 2018 ஆம் ஆண்டில் இருந்து தனது சில சீடர்களுடன் தலைமறைவானார்.

இவர் தனக்கென ஆரம்பித்துள்ள யூடியூப் பக்கத்தில் தொடர்ந்து வீடியோக்களை பதிவேற்றி வருகின்றார். இந்நிலையில் கைலாசா நாடு தொடர்பாக தற்போது ஒரு முக்கிய அறிவிப்புகளை விநாயகர் சதுர்த்தி அன்று வெளியிட உள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும் கைலாசா நாட்டிற்கு உரிய கரன்சி நோட்டுகளும் தயாராக இருப்பதாகவும், வெளிநாடுகளுக்கு ஒரு கரன்சியும், உள்நாட்டில் ஒரு கரன்சியும் பயன்படுத்தப்பட இருப்பதாகவும்  தெரிவித்துள்ளார்.


வாடிகன் வங்கியை மாதிரியாக வைத்து ரிசர்வ் பேங்க் ஆஃப் கைலாசா உருவாக்கப்பட்டுள்ளதாகவும், 300 பக்க பொருளாதார கொள்கையும் தயாராக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
First published: August 12, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading