கரன்சி அறிவிப்பு எல்லாம் சரி... நித்தியானந்தாவும், அவர் உருவாக்கியுள்ள நாடும் எங்கே?

  • Share this:
தனிநாடு, ரிசர்வ் வங்கி என தனி நாடு அமைப்பதற்கான பணியில் தீவிரமாக இருப்பதாக கூறி வரும் நித்தியானந்தா அந்த நாட்டிற்கான நாணயத்தையும் வெளியிட்டுள்ளார்.

தனி நாடு என நித்தியானந்தா சொல்வது என்ன?

பல்வேறு சர்ச்கைகளில் சிக்கிய நித்தியானந்தா, சமீபத்தில் அகமதாபாத் போலீசாரால் பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளியாக தேடப்பட்டு வருகிறார்.


எங்கிருக்கிறார் என தெரியாமல் நாள்தோறும் வீடியோவை வெளியிட்டு சத்சங்கம் செய்து வருகிறார். கைலாசா என்ற தனி நாட்டை உருவாக்கப்போவதாக கூறியிருந்தார். ஈக்வடாரில் பதுங்கி இருப்பதாகவும், அங்கு ஒரு தீவை வாங்கியதாக வெளியான தகவலை அந்த நாடு மறுத்துவிட்டது. எனினும் தான் கைலாசா என்ற நாட்டை உருவாக்கி விட்டதாகவும், அதற்கு ரிசர்வு வங்கி உருவாக்கிவிட்டதாகவும் கூறினார்.

கைலாசாவின் அதிபர் என நெட்டிசன்கள் மீம்ஸ் போட்டும், டிவிட்டரில் டிரெண்ட் செய்தும் கலாய்த்தனர். அதற்காக ஒரு விளக்கம் கொடுத்து ஒரு வீடியோவை வெளியிட்டு டிரெண்டாக்கினார்.

கைலாசாவிற்கான நாணயத்தை விநாயகர் சதுர்த்தி அன்று அறிவிக்கப்போவதாகக் கூறியவர் அதன்படி சனிக்கிழமை அறிமுகப்படுத்தியுள்ளார். கால் காசு முதல் 10 பைசா வரையிலான 5 வகையான நாணயங்களை அறிமுகப்படுத்தியுள்ளார்.அந்த நாணயத்திற்கு தமிழில் பொற்காசு என்றும் ஆங்கிலத்தில் கைலாஷியன் டாலர் என்றும் இந்தியில் ஸ்வர்ண முத்ரா என்றும் பெயரிட்டுள்ளார்.

கைலாசா நாணயங்களைக் கொண்டு 56 இந்து நாடுகளுடன் வர்த்தகம் மேற்கொள்ளப்படும் எனவும் நித்தியானந்தா கூறியுள்ளார். இதற்கு அடுத்து மிச்சமிருப்பது கைலாசாவிற்கான பாஸ்போர்ட்தான் அதை எப்போது அறிவிப்பார் என அவரை பின்பற்றுபவர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

கைலாசாவிற்கான நாணயத்தை அறிவிப்பது இருக்கட்டும், நித்தியானந்தா எங்கிருக்கிறார்? அந்த கேள்விக்கு விடை கிடைத்தால், கைலாசா, அதிபர், நாணயம் என எல்லாவற்றுக்கும் விடைகிடைத்துவிடும் என்கின்றனர் அவரின் அறிவிப்பை நம்பாதவர்கள். எங்கிருக்கிறார் என ஒரு வீடியோ வெளியிடுவாரா?
First published: August 23, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading