நித்யானந்தாவின் சீடர் தற்கொலை - தூக்குக் கயிறுடன் பகீர் வாக்குமூலம்

நித்யானந்தாவின் சீடர் தற்கொலை - தூக்குக் கயிறுடன் பகீர் வாக்குமூலம்
நித்யானந்தா
  • Share this:
நித்யானந்தாவின் சீடர் ஒருவர், தனது வீட்டில் திடீரென தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். தற்கொலைக்கு முன் அவர் தூக்குக் கயிறை பிடித்தபடி, வெளியிட்ட வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் ஆறகளூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ராமச்சந்திரன் - கலையரசி தம்பதி. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர் இவர்களின் ஒரே மகன்தான் 27 வயதான இளைஞர் தினேஷ்; எம்.இ பட்டதாரி. ராமச்சந்திரன், ஆறகளூரில் காலணி கடை ஒன்று நடத்தி வருகிறார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன், நித்யானந்தாவால் கவரப்பட்டு பெங்களூரு ஆசிரமத்தில் சேர்ந்தார் தினேஷ்.

அங்கு பயிற்சிகள் பெற்ற பிறகு, சென்னை திரிசூலத்தில் உள்ள நித்யானந்தா ஆசிரமத்தில் தங்கி இருந்தார். இந்த நிலையில், சென்னையில் இருந்து வியாழக்கிழமை நள்ளிரவு சொந்த ஊருக்குத் திரும்பியுள்ளார் தினேஷ். காலையில் கடையில் வேலை இருப்பதாக தந்தை அழைத்த நிலையில் தான் சிறிது தாமதமாக வருவதாகக் கூறியுள்ளார் தினேஷ்


காலை 10 மணியளவில் வீட்டில் யாரும் இல்லாத நிலையில், சமையலைறையில் மின்விசிறி மாட்டும் கொக்கியில் துாக்குக் கயிறை மாட்டியவாறு தனது முகநுால் பக்கத்தில் லைவ் வீடியோவை வெளியிட்டார் தினேஷ்.மொத்தம் 6 நிமிடங்கள் ஃபேஸ்புக்கில் லைவ் வீடியோவெளியிட்ட போது அவரது நண்பர்களும் நித்யானந்தாவின் சீடர்கள் பலரும் முகநுாலில் அதைப் பார்த்துள்ளனர். உடனடியாக தனது முடிவைக் கைவிடும்படியும் கோரியுள்ளனர். ஆனால் தினேஷ் அதைக் கேட்கவில்லை. சில நொடிகளில் செல்போனைக் கீழே வைத்து விட்டு துாக்குக் கயிற்றில் தொங்கி உயிரை விட்டுள்ளார் தினேஷ்நண்பகல் 12 மணி வரை மகன் வராததால் சந்தேகமடைந்த பெற்றோர், கடையில் இருந்து வீட்டிற்கு சென்று பார்த்தபோது அதிர்ச்சியடைந்தனர். தகவல் அறிந்த தலைவாசல் போலீசார், சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்; வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், சில தகவல்கள் தெரியவந்துள்ளன.

2019ம் ஆண்டு, பிஎன் செய்திகள் என்ற பெயரில் செய்திகளுக்காக தனி முகநுால் பக்கம் ஒன்றைத் தொடங்கி நடத்தி வந்துள்ளார். 2019-ம் ஆண்டு ஜூலை மாதம், சென்னை திரிசூலத்தில் உள்ள நித்யானந்தா ஆசிரமத்தில் இருந்த படி நியூஸ் என் என்ற பெயரில் தனியாக ஃபேஸ்புக் பக்கம் ஒன்றைத் தொடங்கியுள்ளார் தினேஷ். இந்த இரண்டு பக்கங்களிலும் நித்யானந்தாவிற்கு ஆதரவாக பல்வேறு வீடியோக்களை தினேஷ் வெளியிட்டுள்ளார். அதை தான் மட்டுமே தனது சொந்த செலவில் நடத்தி வருவதாகவும் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்திருந்தார்

நித்யானந்தா சீடர் தற்கொலை


இந்த நிலையில்தான், ஆசிரமத்தைச் சேர்ந்த ஒருவரின் மகளைக் காதலித்ததாகவும் அது நிறைவேறாததால், மனவிரக்தியில் அவர் இருந்ததாகவும் அவரது தந்தை தெரிவித்துள்ளார்

அதேநேரம், மார்ச் 1-ம் தேதி வாக்கில், நித்தி ஆசிரமத்தில் இருந்து வெளியேறிய தினேஷ், சென்னையில் ஒரு தனியார் செய்தி நிறுவனத்தில் செய்தியாளராகப் பணியில் சேர்ந்ததாகவும் கூறப்படுகிறது. வியாழக்கிழமை பெற்றோரிடம் பேசிய தினேஷ், அவர்கள் பார்க்கும் பெண்ணைத் தான் மணக்க தீர்மானித்திருப்பதாகவும் ஊருக்கு வந்து கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

பிப்ரவரி 27-ம் தேதி விரைவில் மாற்றத்தை தேடி என பதிவிட்ட தினேஷ், மார்ச் 1ம் தேதி தான் மனதளவில் காயம்பட்டதால் விலகியிருப்பதாகவும் சூசகமாக தனது முகநுால் பக்கத்தில் சில செய்திகளை வெளியிட்டுள்ளார். இந்த நிலையில்ததான் அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவர் தற்கொலை செய்த சிறிது நேரத்தில் அவரது முகநுால் பக்கத்தில் இருந்து அவரது வீடியோ நீக்கப்பட்டது. பின்னர் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது.

மேலும் படிக்க: பகலில் சமையல் வேலை... அமாவாசை இரவில் திருட்டுத் தொழில் - பிரபல டாஸ்மாக் கொள்ளையன் கைது!


First published: March 6, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading