Home /News /tamil-nadu /

உயர்நீதிமன்றம் தீர்ப்பு: நித்யானந்தா 'இன்'... அப்ப அருணகிரிநாதர் 'கெட்-அவுட்டா'?

உயர்நீதிமன்றம் தீர்ப்பு: நித்யானந்தா 'இன்'... அப்ப அருணகிரிநாதர் 'கெட்-அவுட்டா'?

  • News18
  • Last Updated :
    மதுரை ஆதீன மடத்தின் 293ஆவது ஆதீனமாக நித்தியானந்தா தொடரலாம் என்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தீர்ப்பு வழங்கியுள்ளது.

    மதுரை ஆதீன மடத்தின் குருமகா சன்னிதானமாக இருந்துவரும் அருணகிரிநாதர்,  இளைய ஆதீனமாக நித்தியானந்தாவை நியமனம் செய்தார். அதன்பின் இருவருக்கும் இடையே முரண்பாடுகள் ஏற்பட்டன. மேலும், நித்தியனந்தா மீது பாலியல் புகார்களும் எழுந்த நிலையில், நித்தியானந்தா நியமனத்தை ரத்து செய்வதாக மதுரை ஆதினம் அறிவித்தார்.

    இதனை எதிர்த்து, நித்தியானந்தா சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இது குறித்த வழக்கு கீழமை நீதிமன்றத்தில் நடைபெற்றது. அதன் முடிவில், மதுரை ஆதீனம் தொடர்பான உரிமை நித்தியானந்தாவுக்குக் கிடையாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.

    இதனை எதிர்த்து, மதுரை ஆதீன உரிமை தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தொடரப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை, நேற்று (செப்டம்பர் 26) நடைபெற்றது. அப்போது, கீழமை நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்து உத்தரவிட்டார் நீதிபதி எம்.வி.முரளிதரன். மதுரை இளைய ஆதீனமாக நித்தியானந்தா பணியாற்றலாம் என்று அனுமதித்து உத்தரவிட்டார். மதுரை ஆதினம் 2,500 ஆண்டுகள் பழைமையானது என்று பக்தர்களால் போற்றப்படுவது குறிப்பிடத்தக்கது.
    Published by:Saroja
    First published:

    Tags: Madurai Athinam, Madurai High Court, Nithiyanatha, Sexual issues

    அடுத்த செய்தி