போலீஸ் மீதே வழக்கு போட்ட நித்தியானந்தா !

ஆசிரமத்தில் உள்ள சிறுமிகளிடம் ஆபாச படங்கள் மற்றும் வீடியோ காட்சிகளை காண்பித்து விசாரணை மேற்கொண்டதாக புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்லது

  • Share this:
நித்யானந்தா ஆசிரம சிறுமிகளிடம் ஆபாச படங்களை காட்டி விசாரணை நடத்தியதாக போலீசார் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குழுவை சேரந்த அதிகாரிகள் உட்பட 14 பேர் மீது, அகமதாபாத் நீதிமன்ற உத்தரவின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. 

பாலியல் வன்கொடுமை வழக்கில் இருந்து கொலை வழக்கு வரை சிக்கியவர் சாமியார் நித்தியானந்தா.

கைலாசா நாடு அமைக்க போவதாக கூறிக்கொண்டு 2018 ஆம் ஆண்டில் இருந்து தனது சில சீடர்களுடன் தலைமறைவானார்.


நிந்தியானந்தாவிடம் சிக்கியுள்ள தனது இருமகள்களை காப்பாற்றி கொடுக்க வேண்டும் என நித்தியின் முன்னாள் சீடர் ஜனார்த்தன சர்மா குஜராத் மாநிலம் அகமதாபாத் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த அகமதாபாத் நீதிமன்றம் குஜராத் மாநிலம் ஹிராபூரில் உள்ள நித்தியின் ஆசிரமத்தை சோதனை செய்ய உத்தரவிட்டிருந்தது.

இதைத்தொடர்ந்து குஜராத் மாநில விவேகானந்தா நகர் போலீசார் நித்தியின் ஆசிரமத்தில் விசாரணை நடத்தினர்.ஜனார்த்தன சர்மாவின் மகள்கள் குறித்து ஆசிரமத் தரப்பிடம் போலீசார் விசாரணை நடத்தியும் பெண்கள் எங்கு இருக்கின்றார்கள் என்று தெரியாமல் இருந்து வந்தது.

இந்தநிலையில் தான் ஆசிரமத்தில் போலீசார் நடத்திய விசாரணை தொடர்பாக அந்த ஆசிரமத்தைச் சேர்ந்தவரும், நித்யானந்தாவின் சீடருமான கிரிஷ் துர்லாபதி ஆமதாபாத்தில் உள்ள தனிக்கோர்ட்டில் போலீசாரின் விசாரணைக்கு எதிராக வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், ஆசிரமத்துக்கு விசாரணை நடத்த வந்த விவேகானந்தா நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆர்.பி.ராணா உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் மற்றும் குழந்தைகள் நல குழுவைச் சேர்ந்தவர்கள் ஆசிரமத்தில் உள்ள சிறுமிகளிடம் ஆபாச படங்கள் மற்றும் வீடியோ காட்சிகளை காண்பித்து விசாரணை மேற்கொண்டதாக அந்த மனுவில் புகார் தெரிவித்திருந்தனர்.

மேலும் தங்களுக்கு சாதகமான பதிலை சிறுமிகளிடம் இருந்து பெற அவர்களை மிரட்டி, மனரீதியாக துன்புறுத்தியதாகவும் நித்தியின் ஆசிரமத்தின் தரப்பில் புகார் மனு கொடுக்கப்பட்டிருந்த்து.

இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் ஆசிரமத்தில் விசாரணைக்கு சென்ற அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்து உரிய விசாரணை நடத்த உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதனை தொடர்ந்து காவல் ஆய்வாளர் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள் உள்ளிட்ட 14 பேர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தவறு நடந்தால் நீதிமன்றத்தின் வழியாக நீதியை நிலைநாட்ட துடிக்கும் நித்தி தன்மீது சுமத்தப்பட்டுள்ள பாலியல் வன்கொடுமை, கொலை, மோசடி வழக்குகளுக்கு நீதிமன்றம் வருவாரா?
First published: March 10, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading